கம்பராமாயணம் 2215 · அயோத்தியா 9.38
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
குரு மணிப் பூண் - நிறம் அமைந்த மணிக் கற்கள் அழுத்திய அணிகளை (அணிந்த); அரசு இளங் கோளரி - அரசிளஞ் சிங்கம் ஆகிய சத்துருக்கனன்; இரு கை கூப்பி இறைஞ்சினன் - தன் இரண்டு கைகளையும் குவித்துப் (பரதனை) வணங்கி, (இப்போது இந்நகரின் நிலையைப் பார்த்தால்) “எய்தியது உறு துயர் - நேர்ந்துள்ள மிக்கதுயரம்; ஒரு வகைத்து அன்று - ஒரு தன்மைப்பட்டது அன்று; (அன்றியும்) ஊழி வாழ் - கற்ப முடிவுக்காலம் வரையும் வாழக்கூடிய; திருநகர் திரு - சிறந்த இந்த நகரத்துச் சீதேவி (திருமகள்); தீர்ந்தனள் ஆம்” - நகரத்தை விட்டு அடியோடு போய்விட்டாள் ஆகும்; என்றான் -.
எல்லாரினும் இளையவனும், தயரத மாமன்னனின் மகனும் ஆதலின் சத்துருக்கனன் 'அரசிளங்கோளரி' எனப் பெற்றான். மூத்தோர்பால் ஒன்று சொல்லும் போது வணங்கிக் கூறல் மரபு. உறு - மிகுதி. “அவைதாம், உறு, தவ, நனி என வரூவும் மூன்றும், மிகுதி செய்யும் பொருள என்ப” (தொல்- சொல் உரி. 3) என்பது காண்க. ஊழி வாழ்தலை நகர்க்கும், திருவுக்கும் ஏற்புழி ஏற்றிக் கொள்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The young lion of a prince, adorned with jewels of rich colours,
- joined his two hands and bowed: 'The sorrow that has come
- is of no common kind; it seems Tiru of this sacred city,
- which should endure through the ages, has gone,' he said.
What the poem says
Catturukkaṉaṉ, the youngest of the brothers, answers with joined hands, as a younger brother should when speaking to an elder.
The disaster that has struck is no ordinary one, he says. Tiru, the goddess of fortune who should live in this city until the end of the age, seems to have left it for good.