கம்பராமாயணம் 2216 · அயோத்தியா 9.39

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அனைய வேலையில் , அச்சுடைத் தேர் அரண்
மனையின் நீள் நெடு மங்கல வாயிலை
நினையு மாத்திரத்து எய்தலும் நேமியான்
தனையனும் , தந்தை சார்விடம் மேவினான் .

பொருள் · Meaning in Tamil

அனைய வேலையில் - இவ்வாறு உரையாட்டு நிகழும் பொழுதில்; அக்கடைத் தோரண மனையின் - அந்த வாயிலிற் கட்டிய தோரணக் கொடிகளையுடைய மாளிகைகளால்; நீள் நெடுமங்கல வீதிகள் - நெடிதுயர்ந்த மங்கலம் பொருந்திய தெருக்களை; நினையும் மாத்திரத்து - நினைக்கும் பொழுதிற்குள் (கணப் பொழுதில்); ஏகிய - கடந்து சென்ற; நேமியான் தனையனும் - சக்கரவர்த்தி தயரதன் குமாரனாகிய பரதனும்; தந்தை - தன் தந்தையாகிய தயரதன்; சார்வு இடம் - வழக்கமாகத் தங்கியுள்ள அரண்மனையை; மேவினான் - சென்று அடைந்தான்.

நேமி - சக்கரம். நேமியான் - ஆணைச் சக்கரம் உடைய அரசன்; இங்குத் தயரதன். பரதன் தான் கண்ட காட்சிகளால் முன்பே “மன்னன் வைகும் வளநகர் போலும் ஈது?” என்று (2137) ஐயப்பட்டான் ஆதலின், அரசனை முதலிற் பார்க்க விரும்பினான். நெடுந் தெருக்கள் பல கடந்து அரச மாளிகையை அடைந்தான் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that moment, the son of the wheel-wielding king,
  2. having passed, in the mere time of a thought, the long auspicious streets
  3. lined with mansions hung with festoons at their gates,
  4. reached the place where his father dwelt.

What the poem says

As the brothers talk, Paratan races through the long streets of festooned mansions and reaches his father's palace in a moment.

Since he has already wondered whether the king is still in the city, his first wish is to see his father. Tacarataṉ is called "the wheel-wielding king": an emperor whose command (the "wheel" of sovereignty) runs everywhere.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉaiya vēlaiyil, ak kaṭait tōraṇa
maṉaiyiṉ nīḷ neṭu maṅkala vītikaḷ
niṉaiyum māttirattu ēkiya nēmiyāṉ
taṉaiyaṉum, tantai cārviṭam mēviṉāṉ.