கம்பராமாயணம் 2218 · அயோத்தியா 9.41

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆய காலையில் , ஐயனை நாடித் தன்
தூய கையில் தொழல் உறுவான் தனைக்
'கூயள் அன்னை , குறுகுதிர் ஈண்டு ' என
வேய் கொள் தோளி ஒருத்தி விளம்பினாள் .

பொருள் · Meaning in Tamil

ஆய காலையில் - அந்தச் சமயத்தில்; ஐயனை நாடி - தந்தையைத் தேடி; தன் தூய கையின் - தன் தூய்மையான கைகளால்; தொழல் உறுவான்தனை - தொழுதற்கு விரைந்துகொண்டிருக்கும் பரதனை நோக்கி; வேய்கொள் தோளி ஒருத்தி - மூங்கில் அனைய தோள் உடைய (கைகேயியின்) ஏவல் மகள் ஒருத்தி, “அன்னை கூயள் - உங்கள் தாய் கைகேயி கூப்பிட்டாள்; ஈண்டுக் குறுகுதிர்' - இங்கு வருக; என விளம்பினாள் - என்று கூறினாள்.

இராமபிரானைத் தொழுங் கையாதலின் தூய கை என்றார் எனலாம். குறுகுதிர் - உயர்வொருமை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that time, as he searched for his father, longing
  2. to worship him with his pure hands,
  3. 'Your mother calls you; come this way,'
  4. said a woman with shoulders like bamboo.

What the poem says

While Paratan is still searching for his father, eager to bow to him, one of Kaikēyi's maids comes and tells him that his mother has sent for him.

His hands are called "pure", perhaps because they are the hands that worship Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āya kālaiyil, aiyaṉai nāṭit taṉ
tūya kaiyiṉ toḻal uṟuvāṉtaṉai
'kūyaḷ aṉṉai, kuṟukutir īṇṭu ' eṉa
vēy koḷ tōḷi orutti viḷampiṉāḷ.