கம்பராமாயணம் 2220 · அயோத்தியா 9.43
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(பரதன் கைகேயியைப் பார்த்து) “மூண்டு எழு காதலால் - என் உள்ளத்திலிருந்து மேல் எழும்புகின்ற பெரு விருப்பத்தால்; முளரித் தாள் தொழ - (தயரத மன்னனது) தாமரையாகிய திருவடிகளை வழிபட; வேண்டினென் - விரும்பி; எய்தினென் - வந்துள்ளேன்; உள்ளம் விம்மும் - (தந்தையைக் காண) மனம் துடிக்கிறது; ஆண்தகை நெடுமுடி அரசர் கோமகன் - ஆடவர் திலகமாய அருங்குணம் உடைய நீண்ட மகுடம் அணிந்த மன்னர் மன்னனாகிய தயரதன்; யாண்டையான்? - எவ்விடத்தான்?; பணித்திர்' - சொல்லுங்கள்; ' என்று -; இரு கை கூப்பினான் - இரண்டு கைகளையும் குவித்துத் தாயை வணங்கினான்.
பணித்திர் - உயர்வொருமை. அறுபதினாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அரசு வீற்றிருந்தவன் ஆதலின் “நெடுமுடி' என்றார். தயரதனைத் தேடிக் கண்டிலன்; நகருட் புகுந்தவுடன் 'அருப்பம் அன்று இது” என்று ஐயம் உற்றனன். ஆதலான். தந்தையைக் காண மூண்டு எழு காதல் அவன்பால் உண்டாகியது; உள்ளம் விம்மியது என அறிக. 'ஆல்' அசை நிலை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'With a love that blazes up within me I longed to worship
- his lotus feet, and I have come; my heart is bursting;
- the manly lord of kings with the tall crown,
- where is he? Tell me,' he said, and joined his two hands.
What the poem says
Paratan asks his mother directly where his father is. He has come longing to bow at the king's feet, and his heart is pounding with anxiety, since he could not find him.
The "tall crown" alludes to Tacarataṉ's very long reign, said to have lasted more than sixty thousand years.