கம்பராமாயணம் 2222 · அயோத்தியா 9.45

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1எறிந்தன கடிய சொல் செவியுள் எய்தலும் ,
நெறிந்து அலர் குஞ்சியான் நெடிது வீழ்ந்தனன் ;
அறிந்திலன் , உயிர்த்திலன் , அசனி ஏற்றினால்
மறிந்து உயர் மராமரம் மண் உற்றென்னவே .

பொருள் · Meaning in Tamil

எறிந்தன - வேல் எறிந்தாற் போன்ற; கடிய சொல் - (கைகேயியின்) கொடுஞ்சொல்; செவியுள் எய்தலும் - காதிற்குள் நுழைந்தவுடன்; நெறிந்து அலர் குஞ்சியான் - படிப்படியாக நெறிப்புடைத்தாய் விரிந்த தலைமயிரை உடைய பரதன்; அசனி ஏற்றினால் - பேரிடியால்; உயர் மராமரம் - ஓங்கி வளர்ந்த மராமரமானது; மறிந்து மண் உற்றென்ன - ஒடிந்து மண்ணிலே விழுந்ததுபோல; நெடிது வீழ்ந்தனன் - நீண்டு விழுந்து; அறிந்திலன் - அறிவு கெட்டு; உயிர்த்திலன் - மூச்சற்றவனாய்க் கிடந்தான்.

இடியேறுண்ட மராமரம் கைகேயி சொற்கேட்டு வீழ்ந்த பரதனுக்கு உவமை ஆயிற்று, அசனி - இடி - இடிஏறு என்பது ஆண்மை மிக்க இடி எனப்பெறும்; அஃதாவது பேரிடி. ஏ' ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When those cruel words, flung like a spear, reached his ears,
  2. he of the curling, spreading locks fell full length;
  3. he knew nothing, he did not breathe, like a lofty
  4. marā tree split by a thunderbolt and hurled to the earth.

What the poem says

Kaikēyi's words strike Paratan like a thrown spear. He crashes to the ground like a tall marā tree split by a thunderbolt.

He lies senseless and seems to stop breathing.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṟintaṉa kaṭiya col ceviyuṟa eytalum,
neṟintu alar kuñciyāṉ neṭitu vīḻntaṉaṉ;
aṟintilaṉ, uyirttilaṉ, acaṉi ēṟṟiṉāl
maṟintu uyar marāmaram maṇ uṟṟeṉṉavē.