கம்பராமாயணம் 2223 · அயோத்தியா 9.46
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(பரதன் தேறி) தன் வாய் ஒளி மழுங்க - தன் முகவொளி மங்கிப் போகவும்; மலர்ந்த தாமரை ஆய் மலர் நயனங்கள் - அன்றலர்ந்த தாமரையின் ஆராய்ந்த அழகுமலர் ஆகிய கண்கள்; அருவி சோர்தர - நீரை அருவியாகச் சொரியவும்; (தாயை நோக்கி) “செவியில் - காதுகளில், எரிதீ வைத்த அனைய தீய சொல் - எரிகின்ற நெருப்பை வைத்தது போன்ற கொடுஞ் சொற்களை; உரைசெய - பேசுதற்கு; நீ அலது - நீ அல்லாமல்; நினைப்பரோ? - (பிறர்) நினைப்பார்களோ; ' என்றான்.
கைகேயியின் கல்நெஞ்சு “வருந்தல் நீ' என்ற (2145) உரையால் வெளிப்படுதலின், நீ அலது பிறர் உரைசெய்ய நினையவும் மாட்டார்; பேசுவது எங்ஙனம் என்றான். கைகேயி நினைத்ததோடன்றிப் பேசவும் செய்தனள் என்ற அவள் கொடுமையை 'நினைப்பரோ' என்ற பரதன் வினா புலப்படுத்தியது. 'ஓ' வினாப்பொருட்டு; நினையார் என்பது விடை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The light of his face dimmed, his eyes, fine flowers
- of the open lotus, streaming like waterfalls,
- 'Words as evil as blazing fire set in the ear:
- who but you would even think of speaking them?' he said.
What the poem says
Coming to, Paratan weeps and turns on his mother. Her words were like fire poured into his ears.
What has shocked him most is her heartless "do not grieve". No one but she, he says, could even think such words, let alone say them.