கம்பராமாயணம் 2224 · அயோத்தியா 9.47

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முருகின் செவ்வியான் - முருகனை ஒத்த பேரழகு உடைய பரதன்; ஏங்கினன் எழுந்தனன் - (விழுந்து கிடந்த தரையில் இருந்தும்) ஏக்க முற்று எழுந்து; இரங்கி - மனம் வருந்தி; பின்னரும் விழுந்தனன் - மீண்டும் கீழ் விழுந்து; விம்மினன் - மனம் பொருமித் துடித்து; வெய்து உயிர்த்தனன் - வெப்பமாகப் பெருமூச்சு விட்டு; அழிந்தனன் - மனம் கெட்டு; அரற்றினன் - பல படியாகப் பிதற்றலானான்; அரற்றி - புலம்பி; பின்னரும் - பிறகு; இன்னன மொழிந்தனன் - இவ்வாறு பேசலானான்.

முருகன் - அழகன். முருகு என்னும் சொற்கு அழகு, மணம், இளமை, கடவுள் தன்மை என்னும் நான்கு பொருள் உண்டு. முருகன் மணம் கமழ் தெய்வத்து இள நலம்“ (திருமுருகு 290) உடையன் ஆதலின் பரதனுக்கு உவமையாயினன். 'இன்னன' என்பதனைப் பின்வரும் ஒன்பது செய்யுள்கள் விரிக்கும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He rose, he moaned, he grieved, and again
  2. he fell; he sobbed, he breathed hot sighs,
  3. he was undone, he wailed, and wailing, these words
  4. he spoke then, he who had the beauty of Murukaṉ.

What the poem says

Paratan's grief comes in waves: he gets up, falls again, sobs, sighs, and cries out. The poet strings the verbs together to show the turmoil.

He is compared to Murukaṉ, the young god whose name means beauty, fragrance, youth and divinity. The lament that follows runs through the next nine verses.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eḻuntaṉaṉ, ēṅkiṉaṉ, iraṅkip piṉṉarum
viḻuntaṉaṉ, vimmiṉaṉ, veytu uyirttaṉaṉ,
aḻintaṉaṉ, araṟṟiṉaṉ, araṟṟi iṉṉaṉa
moḻintaṉaṉ piṉṉarum, murukiṉ cevviyāṉ.