கம்பராமாயணம் 2237 · அயோத்தியா 9.60

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 '
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'வனத்தினன் ' என்று , அவள் இசைத்த மாற்றத்தை
நினைத்தனன் , இருந்தனன் நெருப்பு உண்டான் என ;
'வினை திறம் யாது இனி விளைப்பது ? இன்னமும்
எனைத்து உள கேட்பன துன்பம் , யான் ? ' என்றான் .

பொருள் · Meaning in Tamil

“வனத்தினன்” - (இராமன்) காட்டில் உள்ளான்; என்று -; அவள் இசைத்த மாற்றத்தை - கைகேயி சொன்ன சொல்லை; நினைத்தனன் - (மனத்தில்) எண்ணி எண்ணிப் பார்த்து; நெருப்பு உண்டான் என - நெருப்பை விழுங்கியவனைப் போல; இருந்தனன் - (செயலற்று, மயக்குற்று) இருந்து; (தனக்குத் தானே) “வினைத்திறம் - என் தீவினையின் கூறுபாடு; இனி விளைப்பது யாது - இனிமேலும் எனக்கு உண்டாக்க இருப்பது எத்தகைய தீமையோ? இன்னமும் - மேலும்; யான் கேட்பன துன்பம் - யான் கேட்கவேண்டுவனவாகிய துன்பங்கள்; எனைத்து உள - எத்துணை உள்ளனவோ,” என்றான்.

மிகக் கொடிய செய்திகள் (தந்தை இறந்தமை, இராமன் காடு சென்றமை) இரண்டை முதற்கண் கேட்டதனால் உண்டாகிய அதிர்ச்சியும், துயரமும் பரதனைத் தாக்கின, அதனால், அவன் பயந்து இதனினும் கொடிய துன்பங்கள் எவை கேட்க நேருமோ என்று கூறினான். கேட்ட செய்தியினும் கொடியன வேறில்லையாயினும் ஒவ்வொன்றாக அறிதலின் பரதனின் அச்சம் மிகுவதாயிற்று. ‘இசைத்த’ என்றது இனிமைபடச் சொன்னாள் என்றாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'He is in the forest': brooding on the words she had uttered,
  2. he sat like one who had swallowed fire;
  3. 'What more will the working of my fate bring forth? Still
  4. how many sorrows are there that I must hear?' he said.

What the poem says

The news that Irāmaṉ is in exile, coming right after the news of his father's death, stuns Paratan. He sits as if he had swallowed fire and asks himself what further misfortunes his destiny holds in store.

Nothing worse could actually be told, but because the blows come one at a time, his dread keeps growing. The verb used for Kaikēyi's speech suggests she said it as if it were pleasant news.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vaṉattiṉaṉ ' eṉṟu, avaḷ icainta māṟṟattai
niṉaittaṉaṉ, iruntaṉaṉ neruppuṇṭāṉ eṉa;
'viṉait tiṟam yātu iṉi viḷaippatu? iṉṉamum
eṉaittu uḷa kēṭpaṉa tuṉpam, yāṉ? ' eṉṟāṉ.