கம்பராமாயணம் 2238 · அயோத்தியா 9.61
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
விம்மலோடு - அழுகையோடு; ஏங்கினன் - ஏக்கம் கொண்டு; இருந்த ஏந்தல் - இருந்த பரதன் (கைகேயியை நோக்கி); “அப்பூங்கழல் காலவன் - அந்தப் பொலிவமைந்த வீரக்கழலை அணிந்த கால்களை உடையவனாகிய இராமன்; வனத்துப் போயது - காட்டிற்குச் சென்றது; தீங்கு இழைத்த அதனினோ? - பிறர்க்குத் தீமை செய்த அதனாலா?; தெய்வம் சீறியோ? - தெய்வங்கள் கோபித்ததனாலேயா?; ஓங்கிய விதியினோ - (இவை எல்லாவற்றினும்) மேம்பட்டதாகிய விதியின் விளைவாலேயா?; யாதினோ - வேறு எந்தக் காரணத்தினாலோ?; எனா - என்று கேட்டு..... (அடுத்த பாட்டில் முடியும்)
இராமனது திருமேனி நலங்களுள் வனம் போயது திருவடி ஆதலின், அதன் சிறப்பைப் ‘பூங்கழற்காலவன்’ என்று பரதன் எண்ணியது அவன் மனநிலையைப் புலப்படுத்தி அழகு செய்கிறது. எல்லாம் விதியின் விளைவாகவும் தனக்குத் தெரிந்த சிலவற்றை எடுத்துச் சொல்லி வினாவி, சொல்லாதவற்றை விதியில் அடக்கினான் எனக் கொள்க. செருக்கினால் தன்னளவறியாது கொடுமை செய்யத் தூண்டுவது ‘விதி’ என்றார் எனலும் ஆம். தீத்தொழில் செய்யும் அரசகுமாரரைக் காட்டிற்கு ஓட்டுதல் சூரிய குல வழக்கம். அசமஞ்சன் என்ற அரசகுமாரன் தீய செய்தமையாற் காட்டிற்கு விரட்டப்பட்டான். அது கருதியே ‘தீங்கு இழைத்த அதனினோ’ என்றான் பரதன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The noble one, who sat pining and sobbing, asked: 'That
- one with the bright anklet on his foot going to the forest,
- was it because he did some wrong? Because a god was angered?
- Because of towering fate? Or for what?' saying this...
What the poem says
Still sobbing, Paratan questions Kaikēyi. The sentence continues into the next verse. He lists the possible reasons why Irāmaṉ, whose feet wear the warrior's anklet, could have gone to the forest: some wrong he had done, the anger of a god, or overpowering fate.
He thinks of Irāmaṉ's feet because it was his feet that walked into the forest. In the Solar dynasty a prince who did evil could be banished, as Acamañcaṉ once was, so the first question is not idle, though Paratan cannot believe it of Irāmaṉ.