கம்பராமாயணம் 2239 · அயோத்தியா 9.62
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“இராமனே - இராமபிரானே; தீயன செய்யுமேல் - தீய செயல்களைச் செய்வானாயின்; அவை - அச் செயல்கள்; தலத்து உளோர்க்கு எல்லாம் - இப்பூமியின்கண் உள்ள எல்லார்க்கும்; தாய் செயல் அல்லவோ - தாய் (தன் குழந்தையின் உடல்நலம் பேணும்பொருட்டுச் செய்யும்) செயல் போன்றது அல்லவா? (இனி); போயது - (இராமன் வனம்) சென்றது; தாதை விண் புக்க பின்னரோ? - தந்தையாகிய தயரதன் விண்ணுலகு சென்ற பிறகா (இறந்த பிறகா); ஆயதன் முன்னரோ? - அவன் விண்ணுலகு சேறற்கு முன்னமேயா (உயிருடன் இருக்கும் போதேயா); அருளுவீர் - சொல்லி அருளுக;” என்றான்.
இராமன் தீமை செய்ததனால் வனம் போயிருக்க மாட்டான். இராமன் செய்றெ தீமைகள் தாய் செய்யும் தீமைகள் போலப் பார்வைக்குத் தீமைபோல் தோன்றி உண்மையில் நலம் செய்வதாகும். தாய் தன் குழந்தையைக் காலில் இட்டு நெருக்கிக், கைகளைப் பிடித்து, வாயை நெருக்கி, அழ அழப் பால் ஊட்டுவாள். காண்பார்க்குக் கொடுமை போல் தோன்றும்; உண்மையில் பாலை உண்பித்தலாகிய நற்செயல் அது ஆகும். அதுபோன்றதே இராமன் செயலும்; ஆதலின் ‘தீங்கு இழைத்த அதனினோ’ என்று இராமன் திறத்து நினைத்தலும் தகாது என்றானாம். ‘அருளுவீர்’ என்றது இகழ்ச்சிக் குறிப்பு. இரு கொடுமைகளைக் கவல்வின்றி இசைத்தது அறிந்தான் ஆதலின் இவ்வாறு கூறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Even if Irāmaṉ himself should do harsh things, would they not be
- a mother's acts to all who live on earth?
- Did he go after his father had entered heaven,
- or before that came to pass? Be gracious and tell me,' he said.
What the poem says
Paratan corrects himself: even if Irāmaṉ did something that looked harsh, it would be like a mother forcing milk into a crying child, painful to watch but done for its good. So Irāmaṉ cannot have been banished for a wrong.
He then asks whether Irāmaṉ left before or after their father died. His 'be gracious and tell me' is said with bitter irony, since Kaikēyi has announced two calamities without a trace of grief.