கம்பராமாயணம் 2241 · அயோத்தியா 9.64
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“குற்றம் ஒன்று இல்லையேல் - இராமன் பிறருக்குச் செய்த தீங்கு ஒன்றும் இல்லையாக இருக்குமானால்; வேறு உளோர் கொதித்து செற்றதும் இல்லையேல் - இராமனுக்கு வேறாக உள்ள பகைவர் மனம் வெம்பி வலியை அழித்ததும் இல்லையானால்; தெய்வத்தான் அன்றேல் - தெய்வக் குற்றத்தினாலும் விளைந்தது இல்லையானால்; பெற்றவன் இருக்கவே - தன்னைப் பெற்ற தந்தை தயரதன் உயிரோடிருக்கும் பொழுதே; பிள்ளை கான் புக உற்றது என் - அவன் மகனாகிய இராமன் காடு செல்லும்படி நேர்ந்ததற்குக் காரணம் யாது?; தெரிதர - நன்கு விளங்கும்படி; உரைசெய்வீர்! - சொல்வீராக;” என்றான்.
வேறு எக்காரணமும் இல்லை என்னும்போது தந்தை இருக்கும்போது மகன் காடு சென்றதனால் பரதன் காரணம் கேட்டு வினாவ வேண்டுவதாயிற்று. ‘பின் அவன் உலந்தது என்’ என்று ஒரு பாடம் ‘தெரிதர உரை செய்வீர்’ என்ற பகுதிக்கு உண்டு. மகன் காடு சென்ற பின் தந்தையாகிய தயரதன் இறந்ததற்குக் காரணம் என்ன? என்று பரதன் வினாவினன் என்பர். மகன் காடு சென்றதே தந்தையின் இறப்புக்குக் காரணமாகிவிடுதலின், வேறு காரணம் வினாவி அறிய வேண்டுவதின்று என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If there was no fault at all, if no others in their fury
- destroyed him either, if it was not by a god,
- then why did the son go into the forest while his father lived?
- Tell it so that I understand clearly,' he said.
What the poem says
Kaikēyi has ruled out every reason Paratan could think of, so he presses her: if there was no fault, no enemy and no divine anger, how did a son come to leave for the forest while his father was still alive? He demands a plain explanation.
One textual variant ends the verse by asking instead why the father died after the son left. The commentary notes that the son's departure was itself the cause of the father's death.