கம்பராமாயணம் 2242 · அயோத்தியா 9.65
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“வாக்கினால் - (தயரதன்) தன் வாய்மொழியால்; வரம்தர - (இரண்டு) வரங்களை (எனக்குத்) தர; கொண்டு - அவற்றைப் பெற்று; மைந்தனை வனத்திடை போக்கினேன் - (ஒரு வரத்தால்) மகனாகிய இராமனைக் காட்டிற்குச் செல்லச் செய்தேன்; போக்கு - (அவனை) அனுப்பிவிட்டு; உனக்குப் பார் ஆக்கினேன் - மற்றொரு வரத்தால் (பரதனாகிய) உனக்கு உலக ஆட்சியைச் செய்துவைத்தேன்; நேமி வேந்து அவன் - ஆணைச் சக்கரம் உடைய வேந்தனாகிய அத்தயரதன்; அது பொறுக்கலாமையால் - (மகனைப் பிரிந்த) துயரம் பொறுக்கமாட்டாமையால்; தன் உயிர் நீக்கினான் - தன்னுயிரைப் போக்கிக் கொண்டான்;” என்றாள்.
தன் செயல் எதுவும் இல்லை. முன்பு வரம் தந்தவன் தயரதன். அவன் இப்போது வரத்தை நிறைவேற்றித் தரப் பெற்றுக் கொண்டேன். தயரதன் தந்த வரத்தால் இவ்விரண்டு செயல்களும் நடந்தன. தானே வரம் தந்து பொறுக்காது தன் உயிரைப் போக்கிக் கொண்டான் என்று தன்மேல் பரதன் கோபப்படாதவாறு செய்தியைக் கூறினாள். ஆயினும், ‘போக்கினேன்’, ‘ஆக்கினேன்’ என்ற இரண்டும் அவள் அகங்காரத்தைக் காட்டி “நானே செய்தேன்” என்று அவளைப் பரதனுக்கு இனம் காட்டின. ‘அது’ என்னும் சுட்டு இரண்டில் முன்னையதாகிய இராமன் வனம் புகுந்த செய்தியைக் குறித்து நின்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'When he gave me boons by his spoken word, I took them and sent the son
- away into the forest; having sent him, I made the earth
- yours; because he could not bear that,
- the king of the wheel gave up his life,' she said.
What the poem says
At last Kaikēyi tells the whole story. Tacarataṉ had once promised her boons; she claimed them, used one to send Irāmaṉ into the forest and the other to win the kingdom for Paratan. The king, who ruled by the wheel of command, could not bear losing his son and died.
She frames it so that the king appears to have brought it on himself, hoping to deflect Paratan's anger. Yet her own verbs, 'I sent', 'I made', betray her pride and show Paratan exactly who did this.