கம்பராமாயணம் 2243 · அயோத்தியா 9.66
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சூடின மலர்க்கரம் - தாய்முன் தலைமேற் குவித்திருந்த பரதன் கரமலர்கள்; சொல்லின்முன் - கைகேயி கூறிய வார்த்தை செவியை அடைதற்கு முன்னால்; செவி கூடின - காதுகளைப் பொத்திக் கொண்டன; புருவங்கள் குனித்து நின்று கூத்து ஆடின - (பரதன்) புருவங்கள் வளைந்து நின்று மேலே ஏறியும் கீழே இறங்கியும் நடனமிடுவனவாயின; உயிர்ப்பினோடு - அவன் மூச்சுக் காற்றுடனே; அழல் கொழுந்துகள் - நெருப்புச்சுவாலைகள்; ஓடின - வெளிவந்தன; கண்கள் உதிரம் உமிழ்ந்தன - கண்கள் இரத்தத்தைக் கக்கின.
கைகேயியின் கடுஞ்சொல் கேட்கப் பிடிக்காமல் பரதன் செவிகளைப் பொத்தினன். புருவம் வளைதல் மேலும் கீழுமாதல், மூச்சுக்காற்று வெப்பமாய் வெளிப்படுதல், கண் கோவைப்பழம் போல் சிவத்தல் (உதிரம் கான்றல்) இவை சினத்தின் மெய்ப்பாடுகளாம். ‘ஏ’ ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- His flower-like hands, raised over his head, before the words were done flew to his ears;
- his brows arched and stood and
- danced; with his breath, tongues of flame
- rushed out; his eyes spat blood.
What the poem says
Paratan's reaction to his mother's confession is pure rage. The hands he had joined above his head in respect toward her clap over his ears before she has finished speaking, so as not to hear the rest.
His brows arch and twitch as if dancing, his breath comes out like flame, and his eyes turn blood-red. These are the classical bodily signs of anger.