கம்பராமாயணம் 2245 · அயோத்தியா 9.68

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பாதங்கள் - (சினங்கொண்ட பரதனது) கால்கள்; பெயர்தொறும் - தரையில் மாறிமாறி வைக்கப்படுந்தோறும்; பாரும் மேருவும் - மண்ணும் மேரு மலையும்; மாதங்கம் வரு கலம் - யானையை ஏற்றிவருகிற மரக்கலம்; கால் பொர - (கழற)காற்று மோத; போதம் கொள் - கலத்தைச் செலுத்தும் அறிவைத் தன்பாற் கொண்ட; தனி நெடும் பொரு இல் கூம்பொடு - தனித்த நீண்ட ஒப்பற்ற பாய்மரத்துடனே; மறுகி - சுழன்று; ஓதம் கொள் கடலினின்று - நீர்ப்பெருக்கைக் கொண்ட கடலிலிருந்து; உலைவ போன்ற - தடுமாறி வருந்துவ போன்ற.

யானை யேற்றிய கலம் பாய்மரத்தோடு காற்றால் கடலில் நிலைதடுமாறல், மேருமலையோடும் கூடிய பூமி பரதன் பாதம் பெயர நிலைதடுமாறலுக்கு உவமை ஆயிற்று. யானை - மேரு, மரக்கலம் - பூமி, பரதன் பாதம் - பாய்மரம் என ஒப்புரைக்க. திசையறிந்து காற்றின் போக்கறிந்து செலுத்துவது பாய்மரம் ஆதலின் ‘போதம் கொள் கூம்பு’ என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Whenever his feet shifted, the earth and Mount Mēru
  2. were like a ship carrying an elephant, with its single tall peerless mast that knows the way,
  3. spinning as the wind strikes it,
  4. reeling in the surging sea.

What the poem says

Each time the enraged Paratan shifts his feet, the earth and Mount Mēru sway like a ship carrying an elephant, its tall mast tossing as the wind whirls it about on a heaving sea.

The comparison maps the elephant to Mēru and the ship to the earth. The mast is said to 'have knowledge' because it is what steers a ship by the direction of the wind.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pātaṅkaḷ peyartoṟum, pārum mēruvum,
pōtam koḷ neṭun taṉip poru il kūmpoṭu,
mātaṅkam varu kalam maṟukik kāl pora,
ōtam koḷ kaṭaliṉiṉṟu ulaiva pōṉṟavē.