கம்பராமாயணம் 2246 · அயோத்தியா 9.69
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(பரதன் பெருங் கோபம் கண்டு) வானவர் அஞ்சினர் - தேவர்கள் பயந்தார்கள்; எனைப்பலர் அவுணர் அச்சத்தால் துஞ்சினர் - எத்துணையோ பலராய அசுரர்கள் பயத்தால் இறந்தனர்; திசைக் கரி - திக்கு யானைகள்; மதம் சொரிதொளை - மதம் சொரிகின்ற மிகப் பல தொளைகள்; எஞ்சின - தூர்ந்துபோகப் பெற்றன; இரவி - சூரியன்; மீண்டனன் - மறைந்து போனான்; வெஞ்சினக் கூற்றும் - இயல்பிலேயே கொடுஞ்சினம் உடைய யமனும்; தன் விழி புதைத்தது - தன்னுடைய கண்களை (பரதனைக் காண அஞ்ச) மூடிக் கொண்டான்.
அமுதுண்ட வானவர் அஞ்சினர்; அமுதுண்ணாத அவுணர் பயத்தால் துஞ்சினர்; அமரர் - மரிக்கும் தன்மை அற்றவர். பரதன் சீற்றத்தை உயர்வு நவிற்சியாக வருணித்தார். ‘ஏ’ ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The gods and the demons were afraid; out of fear
- many of them died; the pores that pour out must
- dried up in the elephants of the quarters; the sun turned back;
- even Death of the fierce anger covered his eyes.
What the poem says
The poet uses hyperbole to show the scale of Paratan's anger. The gods, who have drunk the nectar of immortality, can only be frightened; the demons, who have not, actually die of fear.
The elephants that hold up the four directions stop flowing with must, the sun retreats, and even Kūṟṟu, the god of death, cruel by nature, shuts his eyes rather than look at Paratan.