கம்பராமாயணம் 2247 · அயோத்தியா 9.70

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

கொடிய வெங் கோபத்தால் - (பொங்கிப் புறப்பட்ட) மிகக் கொடிய வெகுளியால்; கொதித்த - (மனம்) சூடேறிய; கோளரி - சிங்கமாகிய பரதன்; கடியவள் - கடும்செயல் செய்தவளாகிய கைகேயியை; “தாய்” எனக் கருதுகின்றிலன் - (தன்னுடைய) தாய் என்று நினைக்கவில்லை (ஆயினும் இவளைக் கொன்றால்); நெடியவன் முனியும் - மூத்தோனாகிய இராமன் கோபிப்பான்; என்று அஞ்சி நின்றனன் - என்று கருதிப் பயந்து கொல்லாமல் (தடைப்பட்டு) நின்றான்; இடி உரும் அனைய - பேரிடியை ஒத்த; வெம் மொழி - கொடிய சொற்களை; இயம்புவான் - சொல்லத் தொடங்கினான்.

தன் மகனுக்குப் பழிவரும் செயலைச் செய்தவள் ஆதலின் தாய் அல்லள்; கொடுஞ்செயல் செய்தாள் ஆதலின் கொல்ல வேண்டும். ஆனால், கொன்றாலும் அது இராமனுக்கு உவப்பாகாது என்பது கருதிக் கொல்லாமல் விட்டான் என்றார். பரதன் தாயாகிய கைகேயியைக் கொல்ல நினைத்ததற்கும், கொல்லாமல் விட்டதற்கும் இராமன்மாட்டுக் கொண்ட பக்தியே காரணமாதல் அறிக. இடி உரும் - ஒரு பொருட் பன்மொழி. 2298, 2325 - ஒப்பிட்டுணர்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The lion, boiling with cruel and burning anger,
  2. did not think of the harsh woman as his mother;
  3. fearing 'the tall one would be angered', he held back;
  4. and spoke burning words like a thunderclap.

What the poem says

Paratan, a lion seething with rage, no longer regards Kaikēyi as his mother and would kill her. What stops him is not that she bore him but the thought that Irāmaṉ, 'the tall one', would be displeased.

Both his urge to kill her and his restraint come from the same devotion to Irāmaṉ. Instead of striking, he begins to speak words that fall like thunder.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1koṭiya veṅ kōpattāl kotitta kōḷari,
kaṭiyavaḷ tāy eṉak karutukiṉṟilaṉ;
'neṭiyavaṉ muṉiyum ' eṉṟu añci niṉṟaṉaṉ;
iṭiurum aṉaiya vem moḻi iyampuvāṉ.