கம்பராமாயணம் 2251 · அயோத்தியா 9.74
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“சுழி உடை - வஞ்சனை உள்ள; தாயுடை - தாயாகிய கைகேயியினுடைய; கொடிய சூழ்ச்சியால் - தீய புணர்ப்பினால்; வழியுடைத்தாய் வரும் மரபை மாய்த்து - தொன்றுதொட்டு வரும் சூரிய குலப் பரம்பரை வழக்கை மாறுபடுத்தி; பரதன் -; ஒரு பழி உடைத்து - ஒரு பழியை உடையதாக; பண்டு - முன்பு; ஆக்கினன் - செய்திட்டான்; எனும் மொழி - என்கின்ற பேச்சை; உடைத்து ஆக்கலின் - (பிற்காலத்தில்) பேசும்படியாகச் செய்திடுவதைக் காட்டிலும்; வேறு முறைமை - வேறு ஒழுங்கு (ஏதேனும்); உண்டோ - (நீ செய்த செயலில்) இருக்கிறதா?”
‘மூத்தவற்கு உரித்து அரசு’ என்பது சூரிய குல மரபு. மூத்தவன் இருக்க, இளையவனாய பரதன் அரசுபுரிய வரம் வாங்கிய காரணத்தால் அம்மரபைச் சிதைத்தாள் கைகேயி என்றான் பரதன். ‘மயின்முறைக் குலத்து உரிமையை மனுமுதல் மரபைச் செயிர் உற’ (1470) என்பதனை இங்குக் கருதுக. நின்னால் மரபு மாய்ந்தது என்றானாம். ‘ஓ’ வினாப்பொருட்டு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- '\u201cThrough the cruel scheme of a mother full of guile,
- he destroyed the lineage that came down in due order and
- brought a stain upon it, that Paratan of old\u201d: such
- talk you have made possible; is there any other order in what you did?'
What the poem says
Paratan accuses Kaikēyi of breaking the custom of the Solar dynasty, in which the kingdom belongs to the eldest son. Because of her, later ages will say that 'Paratan, long ago, through his scheming mother, wrecked the ancient line and stained it with disgrace.'
Her plan has achieved nothing except to make such words possible. The commentary compares an earlier verse where the same breach of the dynasty's order is lamented.