கம்பராமாயணம் 2254 · அயோத்தியா 9.77

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஒன்றும் பொய்யா மன்னனை வாயால் , உயிரோடும்
தின்றும் , தீரா வன் பழி கொண்டும் , திரு எய்தி ,
என்றும் நீரே வாழ உவந்தீர் ; அவன் ஏகக்
கன்றும் தாயும் போவன கண்டும் கழியீரே !

பொருள் · Meaning in Tamil

யா மன்னனை - சிறிதளவும் வாய்மையில் தவறாத தயரத மன்னனை; வாயால் - (வரமாய) வாய்ச்சொல்லால்; உயிரோடும் தின்றும் - உயிரோடு தின்றுவைத்தும்; தீரா வன் பழி கொண்டீர் - உலகுள்ளவும் விட்டு நீங்காத கொடும் பழியைத் தேடிக்கொண்டீர்; அவன் ஏக - அந்த மன்னன் இறந்துபட; திரு எய்தி - அவனுக்குரிய அரசுச் செல்வத்தை அடைந்து; நீரே என்றும் வாழ உவந்தீர் - நீரே என்றைக்கும் வாழ வேண்டும் என மகிழ்ந்தீர்!; கன்றும் தாயும் போல்வன கண்டும் - தாயும் கன்றும் போல ஒன்றியிருந்து அன்பு செய்யும் பொருள்களைக் கண்டு வைத்தும் (கன்றாகிய இராமனைப் பிரிந்து வாழத் தாயாகிய உம்மால் எவ்வாறு இயன்றது); கழியீரே - உம் மனக்கருத்தை மாற்றிக்கொள்ளீரே!”

“யார் எப்படிப் போனால் என்ன; நான் வாழ்ந்தால் போதும்” எனக் கைகேயி நினைத்ததைப் பரதன் சுட்டிப் பழித்தான். ‘கழியீரே’ என்பது கழிதல் - பழையன நீங்குதல் - கழியீரே - எதிர்மறை. நீங்க மாட்டீரே - பழைய உம் கருத்தை மாற்றிக்கொள்ள மாட்டீரே என்றான். அதற்குக் ‘கன்றும் தாயும் போல்வன கண்டும்’ என்பது சான்று. உலகில் கன்றும் தாயும் பாசத்தால் நெருங்கி வாழ்வதுபோல் இராமனிடத்தில் உங்கள் தாய்ப்பாசம் சிறந்திருந்தால் அவன் காடு போக நேர்ந்திராது என்றானாம். இனி இவ்வடிகளுக்கு இராமன் வனம் ஏகிய போது, நாட்டில் உள்ள மக்கள் எல்லாம் கன்றைத் தொடரும் தாய் போல அவன் பிரிவால் துயருற்றுப் பின் தொடர்ந்தும் அவலித்தும் சென்ற நிகழ்ச்சியைக் கண்டுவைத்தும் உமது கருத்தைக் கழியீரே என்று பொருள் உரைப்பதும் உண்டு. நாட்டார் அனைவரும் இராமன்பால் அன்புடையராய் இருப்பதைக் கண்டும் இராமனைக் காட்டிற்குச் செல்லச் செய்து நீர் யாரை ஆளப் போகிறீர் என்று சொன்னான் எனக் கருதலாம். இப்பொருளில் அயோத்தியில் இராமன் காடு ஏகிய போது நாடெல்லாம் உடன் தொடர்ந்து சென்ற செய்தி பரதன் செவிப்பட்டதாகக் கொள்ள வேண்டிவரும். அங்ஙனம் கொண்டால் இதுவரை பரதன் கைகேயியை வினாவிய வினாக்கள் பொருளற்றுப் போகும் என்னும் குறையுண்டு. ஏற்பன அறிக. இனி இப்பாட்டில், அவன் ஏக - அந்த இராமன் கானகம் செல்ல என்றும் உரைக்கலாம். ‘அவன் ஏக’ என்பதனை முன்மாற்றாது நேரே கொண்டு ‘அவன் ஏக, கன்றும் தாயும் போல்வன கண்டும் கழியீரே’ எனக் கூட்டி, இராமன் வனம் செல்ல, கன்றும் தாய்ப் பசுவும் போன்ற அஃறிணைப் பொருள்களின் பிரியாது தொடரும் தன்மை கண்டு வைத்தும் உம் கொடுமை நீங்கப் பெறீர் என்றானாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'With your mouth you devoured, life and all, the king who never once broke his word,
  2. and took on a heavy disgrace that will never end; gaining his wealth,
  3. you rejoiced that you alone should live forever; as he departed,
  4. even seeing things that cling like calf and mother, you would not give it up!'

What the poem says

Paratan charges Kaikēyi with having eaten alive, by her words, a king who never broke his promise, and with earning a disgrace that will last as long as the world. She took the royal fortune and was glad, thinking only of her own life.

The last line is read in more than one way. It may mean that she sees how calf and mother cling together and still did not change her heart, for if she had loved Irāmaṉ like a mother he would never have gone. Or it may refer to the people of Ayōttī following Irāmaṉ like cows after their calves when he left, a sight that did not soften her.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1oṉṟum poyyā maṉṉaṉai vāyāl, uyirōṭum
tiṉṟum, tīrā vaṉ paḻi koṇṭīr, tiru eyti,
eṉṟum nīrē vāḻa uvantīr; avaṉ ēka
kaṉṟum tāyum pōlvaṉa kaṇṭum kaḻiyīrē!