கம்பராமாயணம் 2255 · அயோத்தியா 9.78

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 '
'
' ''
பாட வேறுபாடு · Project Madurai reads
1''இறந்தான் தந்தை 'ஈந்த வரத்திற்கு இழிவு ' என்னா ;
'அறந்தான் ஈது ' என்று அன்னவன் மைந்தன் அரசு எல்லாம்
துறந்தான் ; 'தாயின் சூழ்ச்சியின் ஞாலம் அவனோடும்
பிறந்தான் , ஆண்டான் ' என்னும் இது என்னால் பெறல் ஆம் ஏ ? ''

பொருள் · Meaning in Tamil

“தந்தை - தயரதன் என்கிற தகப்பன்; ‘ஈந்த வரத்துக்கு இழிவு’ என்னா - தான் முன் கொடுத்த வரத்துக்கு இழிவு நேர்ந்து விடுமோ (உயிரோடு இருந்தால்) என்று கருதி; இறந்தான் - உயிரொழிந்தான்; அன்னவன் மைந்தன் - அந்தத் தந்தையின் புதல்வன்; ஈது அறந்தான் என்று - இதுவே அறநெறியாகும் என்று கருதி; அரசு எல்லாம் துறந்தான் - அரசை முற்றும் வேண்டாம் என்று காடு சென்றான்; (இவ்வாறு இருவரும் உலகம் போற்றும் செயலில் தலைநிற்க); அவனோடும் பிறந்தான் - அந்த இராமனோடு உடன் பிறந்தவனாகிய பரதன்; தாயின் சூழ்ச்சியின் - தன் தாய் செய்த சூழ்ச்சியால்; ஞாலம் ஆண்டான் என்னும் இது - உலகத்தை எல்லாம் ஆண்டான் என்கின்ற இப்பழிச்சொல்; என்னால் பெறல் ஆமே - என்னால் பெறுதற்குப் பொருந்துமோ?”

கொடுத்த வரத்தை நிலைநிறுத்த இறந்தான் தந்தை; தந்தை சொல்லைக் காப்பாற்ற அரசு துறந்து வனம் புகுந்தான் மகன். உடன் பிறந்தவன் அரசைக் கைப்பற்றி ஆண்டான் என்னும் பழி நான் பெறுதற்குரியதோ? அதையன்றோ நீ செய்தாய் என்றானாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The father died, saying, \u201cMy boon once given must not be shamed\u201d;
  2. saying, \u201cThis is dharma,\u201d that man's son gave up
  3. the whole kingdom; \u201cBy his mother's scheme, the one born with him
  4. ruled the world\u201d: is that what I am to earn?'

What the poem says

Paratan contrasts the conduct of the others with the part assigned to him. His father died rather than see his promised boon dishonoured; his brother gave up the whole kingdom because that was right.

Both acted nobly. And he, born of the same father, is to be known as the one who seized and ruled the world through his mother's plotting. That, he tells Kaikēyi, is the reputation she has won for him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1''iṟantāṉ tantai 'īnta varattukku iḻivu ' eṉṉā;
'aṟantāṉ ītu ' eṉṟu aṉṉavaṉ maintaṉ aracu ellām
tuṟantāṉ; 'tāyiṉ cūḻcciyiṉ ñālam avaṉōṭum
piṟantāṉ, āṇṭāṉ ' eṉṉum itu eṉṉāl peṟalāmē? ''