கம்பராமாயணம் 2256 · அயோத்தியா 9.79

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

அரசு ஆள்வான் - அரசாட்சியைச் செய்தற்கு உரிய முறையுடைய இராமன்; “மாளும்” என்றே தந்தையை உன்னான் - (தான் காட்டிற்குச் சென்றால்) இறந்துபடுவான் தந்தை என்று கருதவில்லை; வசைகொண்டாள் - பழிச்சொல்லைக் கொண்டவளாய கைகேயியின்; கோளும் - மாறுபட்ட எண்ணமும்; என்னாலே - பரதனாகிய என் தூண்டுதலினாலேயே விளைந்தது; எனல் - என்று கருதுதலை; கொண்டான் - உடையன் ஆனான்; என்னையும் -; “மெய்யே - உண்மையாக (உறுதியாக) உலகு எல்லாம் ஆளும்” - உலகையெல்லாம் (இப்பரதன்) ஆள்வான்; என்றே போயினன் அன்றோ - என்று கருதியே (தந்தை இறப்பவும் பொருட்படுத்தாது) காட்டிற்குப் போனான் அல்லவா?; அது அன்றேல் - அப்படி இராமன் கருதவில்லையேல்; மீளும் அன்றே - தந்தை இறந்தவுடன் திரும்பி வந்திருப்பான் அல்லவா?”

தந்தையின் வாக்கைக் காப்பாற்றக் காடு சென்ற இராமனைப் பரதன் சந்தேகிக்கிறான் என்பதன்று; தன்னுடைய துன்ப மிகுதியால் “இப்படியோ, அப்படியோ” என்று தன்மேல் பழியைப் போட்டுக்கொண்டு பலவாறு நினைக்கின்றான் என்பதே இத்தகைய இடங்களில் பொருளாகும். அரசுக்கு உரியவனும், இனி எதிர்காலத்தில் ஆள்பவனும், இராமன் என்பதில் பரதனுக்கு மாறாத உறுதி இருப்பதால் ‘அரசு ஆள்வான்’ என்றே இராமனைக் கூறினான் பரதன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'He did not think his father would die; he believed that the scheme
  2. of the woman who earned this disgrace came about through me; if not that,
  3. would he not come back? Thinking that I too would truly rule
  4. the whole world, did he not go, he who should rule the kingdom?'

What the poem says

Paratan torments himself with a fear: perhaps Irāmaṉ, the rightful king, believed that Kaikēyi's plot was Paratan's doing and that Paratan really wanted the throne. Otherwise, would he not have come back when their father died?

The commentary stresses that Paratan does not really doubt Irāmaṉ. In the depth of his grief he imagines every way in which the blame might fall on himself. He still calls Irāmaṉ 'he who should rule', showing his firm conviction that the kingdom is his brother's.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'māḷum eṉṟē tantaiyai uṉṉāṉ, vacai koṇṭāḷ
kōḷum eṉṉālē eṉal koṇṭāṉ; atu aṉṟēl;
mīḷum aṉṟē? eṉṉaiyum meyyē ulaku ellām
āḷum eṉṟē pōyiṉaṉ aṉṟō aracu āḷvāṉ? '