கம்பராமாயணம் 2258 · அயோத்தியா 9.81

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

“என்முன் உடன் வந்தான் - எனக்கு மூத்தவனும் உடன் பிறந்த சகோதரனும் ஆகிய இராமன்; கை ஆர் கல்லை - கையில் பொருந்திய இலையாகிய கலத்தில்; புல் அடகு உண்ண - அற்பமான இலை உணவை உண்டுகொண்டிருக்க; இன்னமும் -; வெய்யோன் நான் - கொடியவனாகிய நான்; உய்யாநின்றேன் - உயிர் பிழைத்திருக்கின்றேன்; (அம்மட்டோ) கலம் - நல்ல பாத்திரத்திலே (உண்கலத்திலே); இன் சாலியின் வெண்சோறு - இனிய உயர்ந்த நெல்லின் வெள்ளிய சோற்றை; நெய்யோடு - நெய்யுடன்; அமுதென்ன - தேவரமுதம் என்னும்படி; ஏந்தி - சுமந்து; உண்ணா நின்றது - உண்ணும்படி இருந்து கொண்டுள்ளதை; நின்றார் - அருகில் காண நிற்கும் உலகோர்; நினையாரோ? - என்னை இழிவாகக் கருதமாட்டாரோ?”

உயிருடன் இருப்பதே உலகம் தூற்றப் போதும்; அதன்மேல் உண்கலத்தில் சோறும் நெய்யும் அமுதென உண்ண நிற்றல் உலகோர் பழி தூற்ற மேலும் வாய்ப்பன்றோ என்று தன்னைத் தானே நொந்துகொள்கிறான். ‘ஓ’ வினாப்பொருள். கை ஆர் கல்லை - கையாகிய பாத்திரம் எனவும் ஆம். கல்லை - இலை முதலியவற்றைக் குழித்து உண்ணுதற்காகச் செய்த பாத்திரம்; தொன்னை. இராமன் காட்டிலே இலை முதலியவற்றை உண்டுகொண்டு எப்படியிருக்கிறானோ என்று அவன்பால் கொண்ட அன்பிரக்கமும் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'I go on living still; while my elder, born with me,
  2. eats poor greens from a leaf-cup held in his hand,
  3. I, the cruel one, holding a fine dish, eat white rice of sweet paddy as if it were nectar,
  4. with ghee: will those who stand and see it not think ill of me?'

What the poem says

Paratan pictures Irāmaṉ in the forest eating wild greens from a cup of folded leaves held in his hand, while he himself stays alive and is served fine white rice with ghee in a proper dish, as though it were the food of the gods.

Merely being alive is reason enough for the world to blame him; eating well while his brother lives on leaves would give them further cause. Behind the self-reproach lies his tender worry about how Irāmaṉ is faring.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'uyyā niṉṟēṉ iṉṉamum; eṉmuṉ uṭaṉ vantāṉ,
kai ār kallaip pul aṭaku uṇṇak kalam ēnti,
veyyōṉ nāṉ iṉ cāliyiṉ veṇ cōṟu amutu eṉṉa,
neyyōṭu uṇṇā niṉṟatu, niṉṟār niṉaiyārō? '