கம்பராமாயணம் 2259 · அயோத்தியா 9.82
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நல்லான் - நல்லோனாகிய தயரதன்; “வில் ஆர் தோளான் - வில் அமைந்த தோளை உடையவனாகிய இராமன்; வெங்கானகம் மேவினன்” என்ன - கொடிய காட்டை அடைந்தான், என்று சொல்லிய அளவிலேயே; அன்றே துஞ்சினன் - அன்றைக்கே இறந்துபட்டான்; யான் -; நஞ்சே அனையாளைக் கொல்லேன் - விடத்தை ஒத்தவளாகிய கைகேயியைக் கொல்லவில்லை; மாயேன் - (நடந்த நிகழ்ச்சிகளுக்கு நானும் ஒருவகையில் காரணமானதை அறிந்தும்) இறந்து ஒழியேன்; அன்பு உடையார்போல் அழுகின்றேன் - தயரதனிடத்தும், இராமனிடத்தும் அன்புடையவர்போலப் பெரிதாகத் துக்கப்படுகின்றேன்; வன்பழியால் குறைவு அற்றேன் அல்லேனோ - கொடும் பழியால் ஒரு சிறிதும் குறைவு இல்லாதவன் அல்லவா? (பெரும்பழி நிரம்பப் பெற்றவன்.)”
தன்னைத் தானே இகழ்ந்துகொள்வது இப்பாடலில் பரதன் கூற்று. ‘வன் பழியால் குறைவு இல்லாதவன் அல்லவா’ என்று கூறுவதுபோலத் தோன்றி, யான் எல்லாப் பழியும் நிரம்ப உடையன் என்பதைக் குறிப்பாகச் சொல்கிறது. அவலத்தின் உயர்நிலையில் இங்ஙனம் கூறுவதுண்டு. ‘நல்லான்’ என்று தயரதனைக் குறிப்பிட்டபடியால், இவன் ‘தீயான்’ என்று தன்னைக் கருதியதாகக் கொள்ளலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'At the words \u201cHe of the bow-bearing shoulders has gone to the cruel forest\u201d
- the good king died that very day; the woman who is like poison
- I do not kill, nor do I die; am I not one who lacks nothing
- in heavy disgrace? I weep as if I were one who loved!'
What the poem says
Paratan heaps scorn on himself. The good king died the very day he heard that Irāmaṉ had gone to the forest. Paratan, by contrast, has neither killed the poisonous woman responsible nor died himself.
He says he lacks nothing where disgrace is concerned, meaning that he is full of it, and that he weeps as if he loved his father and brother. Calling Tacarataṉ 'the good one' implies that he counts himself the bad one. Such bitter self-mockery belongs to the extreme of grief.