கம்பராமாயணம் 2260 · அயோத்தியா 9.83
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ன் அரசு நடத்துவதை) பாரோர் கொள்ளார் - இந்த நாட்டில் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்; யான் உயிர் பேணிப் பழி பூணேன் - யான் உயிரைப் பாதுகாத்துப் பழியை அணிந்துகொள்ள மாட்டேன்; ஒன்றால் நின் பழி தீராது - இனி எந்தக் காரியம் செய்தாலும் நீ உண்டாக்கிய பழி விலகாது; திரு ஊரில் நில்லாள் - (முறை திரும்பியதால்) இனித் திருமகள் இவ்வூரில் இருக்கமாட்டாள்; ஆரோடு எண்ணிற்று - (இச்செயலைச் செய்ய) யாரோடு ஆலோசித்தாய்?; உரை தந்தார் ஆர் - (உனக்கு) ஆலோசனை சொல்லியவர் யாவர்?; அறம் எல்லாம் வேரொடும் கேடு ஆக முடித்து என் விளைவித்தாய் - அறம் அனைத்தும் அடியோடு அழியும்படியான செயலைச் செய்து நிறைவேற்றி என்ன கொடுமைகளை யெல்லாம் செய்துவிட்டாய்?”
தனக்கு அரசில் சிறிதும் விருப்பம் இல்லை என்பதை முன்னர்க் கூறியுள்ளான் ஆதலின், அப்படிக் கட்டாயப்படுத்தி என்னை அரசேற்க நீ செய்தாலும் உலகோர் ஒப்புக்கொள்ளமாட்டார் என்றான். கைகேயியின் இயல்புக்கு இத்தகைய செயல்செய்யும் துணிவு ஒத்துவராது என்பதை உணர்ந்த மகன் பரதன் ‘ஆரோடு எண்ணிற்று, உரைத்தார் ஆர்’ என்று இங்கே வினாவினான். யாரோ தன் தாயின் மனத்தைக் கெடுத்துள்ளார் என்று இப்போது பரதன் நினைக்கத் தொடங்கியுள்ளான் என்பது தெரிகிறது. ‘யார்’ என்பது செய்யுளின்பம் நோக்கி ‘ஆர்’ என்று நின்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The people of the land will not accept it; I will not cling to life and wear this disgrace;
- by no single act will your disgrace be undone! Fortune will not stay in this city;
- with whom did you plan this? Who gave you the counsel? Bringing all dharma
- to ruin, root and all, what have you brought about?'
What the poem says
Paratan declares that the people will never accept him as king, and that he will not save his own life at the price of wearing this shame. Nothing can now remove the disgrace Kaikēyi has earned, and Tiru, the goddess of prosperity, will desert the city.
Then he asks a pointed question: with whom did she plot this, and who advised her? Knowing his mother, he senses that the boldness of the scheme was not her own and begins to suspect that someone corrupted her mind.