கம்பராமாயணம் 2262 · அயோத்தியா 9.85
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“என் செய் வினை - இனி யான் செய்ய இருக்கும் செயல்திறத்தை; இன்னும் சிலர் கண்ணாலே காண்பார் - என்னை அறியாத வேறு சிலரும் தம் கண்ணாலேயே காணப்போகிறார்கள்; மண்ணோர் பாராது எள்ளுவர் - மண்ணிலுள்ளவர் எதிர்காலத்தில் நடப்பதை எண்ணிப் பாராது தற்போது இகழ்வர் (அது இயல்பே); வாளா - ஒரு பயனும் இன்றி; பழி பூண்டாய் - பழியைமட்டும் மேலிட்டுக் கொண்டாய்; “உண்ணா நஞ்சம் கொல்கிலது” - தான் உண்ணாத விடம் அவனைக் கொல்லாது; என்னும் உரை உண்டு - என்கின்ற பழமொழி உலகில் உள்ளது; என்று எண்ணா - எனக் கருதி; நின்றேன் - (உயிரோடு) இருக்கின்றேன்; அன்றி - (அப்படி நான் செய்யாதவற்றுக்கும் என்மேல் பழிவரும் என்று ஆகுமானால்); என் உயிரோடே இரேன் - என் உயிரோடு நான் இதுகாறும் இருந்திருக்க மாட்டேன், இறந்து போயிருப்பேன்.
கைகேயி எதிர்பார்த்தவாறு பரதன் அரசு ஏற்கப்போவது இல்லை என்பது திடமாய்விடலின், ‘வீணாகப் பழிபூண்டாய்’ என்றான். பழிதான் மிச்சம்; பயன் சிறிதும் இல்லை. தற்போது என்னைப்பற்றிய உண்மை அறியாது இகழ்கிற சிலரும் எதிர்காலத்தில் கண்ணால் என் செய்வினை கண்டு புரிந்துகொள்வர் என்றானாகவும் கொள்க. ‘உண்ணா நஞ்சம் கொல்கிலது’ பழமொழி. “உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு” (9921.) என்ற இடத்திலும் இப்பழமொழி எடுத்தாளப்பெற்றது காண்க. ‘என் பழி எதிர்காலத்தில் நீங்கிவிடும். உன் பழி என்றும் நீங்காது’ என்றான் கைகேயியிடம் பரதன். இதுவரை தன்மேல் பழியை ஏறட்டுப் பேசியவன் இப்போது சிறிது தெளிந்து பேசுவதாகக் கொள்ளலாம். ‘ஏ’ ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'With their own eyes some will yet see what I shall do;
- the people of the earth scorn without looking; you have taken on disgrace for nothing;
- \u201cPoison not swallowed does not kill\u201d: there is that saying, and
- thinking of it I remain; otherwise I would not stay alive.'
What the poem says
Paratan grows a little calmer. People may scorn him now without looking further, but in time they will see with their own eyes what he means to do. Kaikēyi has gained nothing; she has only loaded herself with blame, since he will not take the throne.
He keeps himself alive by the proverb 'poison you have not swallowed cannot kill you': a crime he did not commit cannot finally stain him. His disgrace will pass, but hers will not. Were it otherwise, he would already have given up his life.