கம்பராமாயணம் 2264 · அயோத்தியா 9.87

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

“சிறந்தார் - அறிவாற் சிறந்த சான்றோர்; சொல்லும் நல் உரை சொன்னேன் - சொல்லுகின்ற நல்ல மொழிகளை உனக்கு எடுத்துச் சொன்னேன்; செயல் எல்லாம் - (இதுகாறும் நீ செய்த) செயல்கள் எல்லாவற்றையும்; மறந்தாய் செய்தாய் ஆகுதி - (புத்தித் தெளிவோடு அன்றி) நினைவின்றிச் செய்தவளாவாயாக, (இவ்வாறு கருதுவது மன்னிப்புப் பெற வாய்ப்பாகும்); மாயா உயிர்தன்னை - அழியாதிருக்கின்ற உன்னுடைய உயிரை; துறந்தாய் ஆகில் - விட்டுவிட்டாயானால்; தூயையும் ஆதி - தூய்மை உடையவளாகவும் உலகால் கருதப் படுவாய்; உலகத்தே பிறந்தாய் ஆதி - உலகிற் பிறந்ததனால் வரும் பயனைப் பெற்றவளாகவும் ஆவாய்; ஈது அலது பிறிது இல்லை - இது வல்லது உன் பழி தீர வேறு வழி எதுவும் இல்லை;” என்றான் - என்று கூறி முடித்தான் (பரதன்).

‘நான் புத்தியில்லாமல் செய்துவிட்டேன்’ என்று சொல். எனவே, இனிமேல் உன் எண்ணம் புத்தியோடு மாறவேண்டும் என்றான். இறந்து போனால் பெரிதும் பாராட்டப்படுவாய், நீ பிறந்ததற்கும் ஒரு பொருள் இருக்கும். இரண்டு வழிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்துகொண்டு அதன்படி செய்த என்றான் பரதன். ஒருவேளை பரதன் அறிவுரை கைகேயியால் ஏற்றுக்கொள்ளப்பெற்றது எனக் கருதலாம். இதன் பின்னர்க் கைகேயி காவியத்தில் உரை நிகழ்த்தவில்லை என்பது காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'I have told you the good counsel the wise would give; all your deeds,
  2. let them be deeds you did without thinking; your undying life,
  3. if you give it up, you will also be pure; you will have been
  4. truly born into the world; there is no other way than this,' he said.

What the poem says

Paratan ends his speech with what he calls the counsel of the wise. Kaikēyi should own that she acted without understanding, and change her mind from now on. Or, if she gives up the life that clings so stubbornly to her, she will be thought pure and her birth will have had some meaning.

There is no third way to clear her name. The commentary observes that Kaikēyi does not speak again for the rest of the epic, as if she had taken his words to heart.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ciṟantār collumnal urai coṉṉēṉ; ceyal ellām
maṟantāy ceytāy ākuti; māyā uyir taṉṉait
tuṟantāy ākiṉ, tūyaiyum āti; ulakattē
piṟantāy āti; ītu alatu illaip piṟitu ' eṉṟāṉ.