கம்பராமாயணம் 2266 · அயோத்தியா 9.89

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆண்தகை , கோசலை அருகர் எய்தினன் ,
மீண்டு மண் கிழிதர வீழ்ந்து , கேழ் கிளர்
காண்தகு தடம் கை இன் கமலச் சிறு அடி
பூண்டனன் , கிடந்தனன் , புலம்பினான் அரோ !

பொருள் · Meaning in Tamil

ஆண்தகை - ஆடவருள் சிறந்த பரதன்; மீண்டு - கைகேயி இருப்பிடத்திருந்து சென்று; கோசலை அருகர் எய்தினன் - கோசலைத் தாயின் அருகில் சென்று; மண்கிழிதர வீழ்ந்து - தரை பிளவுபடும்படி (தடாலெனக்) கீழே வீழ்ந்து வணங்கி; கேழ் கிளர் - நிறம் மிக்கு விளங்குகின்ற; காண்தகு தடக்கையின் - காண்பதற்குப் பொருந்திய நீண்ட கைகளால்; கமலச் சீறடி - (கோசலையின்) தாமரைபோன்ற சிறிய பாதங்களை; பூண்டனன் கிடந்தனன் புலம்பினான் - பிடித்துக் கொண்டு (கீழே விழுந்து) கிடந்தபடியே அழத்தொடங்கினான். அரோ: ஈற்றசை.

‘மீண்டு’ என்பதை மாறிச் சேர்க்காது, நேரே சேர்த்துத் திரும்பவும் மண்கிழிதர வீழ்ந்தான் என்றும் பொருள் கூறலாம். இப்பொருளில் வரும்போது பரதன் வந்தவுடன் வீழ்ந்து வணங்கினான், திரும்பவும் கோசலை திருவடியில் வீழ்ந்தான் என்று உரைத்தல் வேண்டும். அருகர் - ஈற்றுப் போலி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The manly one reached Kōcalai's side,
  2. and falling again so that the earth seemed to split, with his
  3. long, shining hands, lovely to see, he clasped her small lotus feet,
  4. and lay there, and wept.

What the poem says

Paratan leaves Kaikēyi and goes to Kōcalai, Irāmaṉ's mother. He throws himself down at her feet so heavily that the ground seems to crack, clasps her small lotus-like feet in his long hands, and lies there weeping.

The word 'again' can be read with 'reached', meaning he returned from Kaikēyi's rooms, or with 'falling', meaning he had already prostrated once on arrival and now fell at her feet a second time.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṇtakai, kōcalai arukar eytiṉaṉ,
mīṇṭum maṇ kiḻitara vīḻntu, kēḻ kiḷar
kāṇ taku taṭak kaiyiṉ kamalac cīṟaṭi
pūṇṭaṉaṉ, kiṭantaṉaṉ, pulampiṉāṉ arō!