கம்பராமாயணம் 2269 · அயோத்தியா 9.92

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'கொடியவர் யாவரும் குலங்கள் வேர் அற
நொடிகிலர் ; யான் அது நுவல்வது எங்ஙனம் ?
கடியவள் வயிற்றினில் பிறந்த கள்வனேன் ,
முடிகுவென் , அரும் துயர் முடிய ' என்னும் ; ஆல் .

பொருள் · Meaning in Tamil

“யான் -; கொடியவர் யாவரும் - (இராமனைக் காடு செல்லச் செய்த) கொடியவர்கள் எல்லோரும்; குலங்கள் வேர் அற - தம் குலங்களோடு வேர் அற்றுப் போகும்படி; நொடிகுவென் - அழித்து விடுவேன்; அது நுவல்வது எங்ஙனம்? - அதுபற்றிச் சொல்வது என்ன பயன் உடையது; (செயலின்தான் அறிய வேண்டும்); கடியவள் வயிற்றினில் பிறந்த கள்வனேன் - (எல்லோரையும் அழித்துவிட்டு இறுதியில்) கொடிய கைகேயி வயிற்றில் பிறந்த வஞ்சகனாகிய யானும்; அருந்துயர் முடிய முடிகுவென் - என்னுடைய பொறுத்தற்கரிய துன்பம் இல்லையாம்படி இறந்துபடுவேன்;” என்னும் - என்று சொல்வான்.

மிகுதியான துன்பத்தால் பேசுகிறான் ஆதலின், ‘கொடியவர்களையும் அழித்து, நானும் இறந்துபடுவேன்’ என்றான். ‘ஆல்’ ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'All the cruel ones, with their clans torn out by the root,
  2. I shall destroy; but how can I just speak of it?
  3. I, the deceiver born from the womb of that harsh woman,
  4. shall end myself, so that my terrible sorrow may end,' he says.

What the poem says

In his grief Paratan swears to wipe out all who had a hand in sending Irāmaṉ away, together with their families. But words are useless; only deeds will show it.

And when that is done, he, the deceitful one born of Kaikēyi's womb, will put an end to his own life so that his unbearable sorrow will end with it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'koṭiyavar yāvarum kulaṅkaḷ vēr aṟa
noṭikuveṉ; yāṉ atu nuvalvatu eṅṅaṉam?
kaṭiyavaḷ vayiṟṟiṉil piṟanta kaḷvaṉēṉ,
muṭikuveṉ, arun tuyar muṭiya ' eṉṉumāl.