கம்பராமாயணம் 227 · பால 5.59

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கொழுந்து ஓடிப் படர் கீர்த்திக் கோ வேந்தன் அடைந்தமை சென்று ஒற்றர் கூறக்,
கழுந்து ஓடும் வரி சிலைக் கைக் கடல் தானை புடை சூழக், கழல் கால் வேந்தன்,
செழும் தோடும் பல் கலனும் வில் வீச, மாகதர்கள் திரண்டு பாட,
எழுந்து ஓடும் உவகையுடன், யோசனை சென்றான், அரசை எதிர்கோள் எண்ணி.

பொருள் · Meaning in Tamil

கொழுந்து ஓடி படர் கீர்த்திக்கோ வேந்தன் - கொழுந்து விட்டு ஓடிப் படர்கின்ற கீர்த்தியை உடைய மன்னர் மன்னனான தயரதன்; அடைந்தமை சென்று ஒற்றர் கூற - தம் நகரை அடைந்த செய்தியை ஒற்றர்கள் உரோமபத மன்னனிடம் சென்று கூற; கழற் கால் வேந்தன் - வீரக் கழலணிந்த கால்களை உடைய அவ்வரசன்; கழுந்து ஓடும் வரி சிலைக்கை கடல் தானைபுடை சூழ - தேய்ந்து மழுங்கித் திரண்ட வரியமைந்த வில்லைக் கையிலுடைய கடல் போன்ற வீரர்கள் கொண்ட படை புடை சூழ; செழும் தோடும் பல்கலனும் வெயில் வீச - செழுமை மிக்க காதணிகளும் பிற அணிகலன்களும் ஒளிரவும்; மாகதர்கள் திரண்டு வாழ்த்த - மாகதர்கள் திரண்டு வாழ்த்தவும்; எழுந்து ஓடும் உவகையுடன் - மேலெழுந்து பொங்கும் மகிழ்வொடு; அரசை எதிர்கோள் எண்ணி - தயரத மன்னனை எதிர்கொண்டு அழைத்து வர நினைத்து; ஓசனை சென்றனன் - தனது நகரிலிருந்து ஒரு யோசனை தூரம் சென்றான்; கொழுந்து: தளிர்; கீர்த்தி: புகழ். “கொழுந்தோடிப் படரும்” கொடிபோல் எங்கும் புகழ் பரப்பி வாழ்பவன் தயரதன் என்கிறார்.

கோவேந்தன்: அரசர்களுக்கு அரசன். ஒற்றர்: உளவாளிகள். கழுந்து: தேய்ந்து திரண்ட வடிவம். அடிக்கடி கையாள்வதால் தேய்ந்து மழுங்கித் திரண்டிருக்கும் “வரிவில்” என்றார். வரிவில்: கட்டமைந்த வில் உவமைத் தொகை. தோடு: காதணி. உவகை: உவத்தல் தொழிற்பெயர். எதிர்கோள்: எதிர்கொள்ளுதல். கோள்: முதல்நிலை திரிந்த தொழிற்பெயர்.

வேந்தன், கோவேந்தனை எதிர்கோள் எண்ணி, எழுந்தோடும் உவகையுடன் சென்றான் என்று முடிக்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When spies went and told that the king of kings, whose fame spreads like a running shoot, had arrived,
  2. the king with anklets on his feet, his sea of an army with striped bows worn smooth in hand around him,
  3. his rich earrings and many jewels flashing out light, bards in throngs praising him,
  4. went one yōjana with joy that rose and ran over, meaning to go out and receive that king.

What the poem says

Urōmapataṉ hears from his spies that Tacarataṉ has come and rides out a full yōjana, a measure of distance of several miles, to welcome him, with his army and his bards.

Tacarataṉ's fame is compared to a creeper's tender shoot that runs and spreads everywhere. The bows are 'worn smooth' from constant handling, a sign of seasoned warriors.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1koḻuntu ōṭip paṭar kīrttik kōvēntaṉ aṭaintamai ceṉṟu oṟṟar kūṟa,
kaḻuntu ōṭum vari cilaik kaik kaṭal tāṉai puṭai cūḻa, kaḻaṟ kāl vēntaṉ,
ceḻun tōṭum pal kalaṉum veyil vīca, mākatarkaḷ tiraṇṭu vāḻtta,
eḻuntu ōṭum uvakaiyuṭaṉ, ōcaṉai ceṉṟaṉaṉ, aracai etirkōḷ eṇṇi.