கம்பராமாயணம் 228 · பால 5.60
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எதிர்கொள்வான் வருகின்ற வய வேந்தன் தனை - தன்னை எதிர் கொண்டு அழைத்துச் செல்ல வருகின்ற வெற்றி பொருந்திய உரோமபத மன்னவனை; கண்ணுற்று எழிலிநாண அதிர்கின்ற பொலம் தேர் நின்று இழிந்துழி - பார்த்து, மேகமும் நாணும்படியாக முழங்குகின்ற தனது பொன்தேரிலிருந்து தயரதன் கீழே இறங்கும் போது; சென்று அடியில் வீழ - உரோமபத மன்னன் சென்று தயரதன் பாதத்தில் வீழ்ந்து வணங்க, முதிர்கின்ற பெருங்காதல் தழைத்து ஓங்க - மேன்மேலும் முதிர்கின்ற பேரன்பு பெருகி ஓங்க; எடுத்து இறுக முயங்கலோடும் - உரோமபத மன்னனைத் (தன் கைகளால்) வாரி எடுத்துத் தழுவியவுடன்; கதிர்கொண்ட சுடர் வேலான் தனை நோக்கி - கதிர்விட்டு ஒளிரும் வேலையுடைய தயரதனைப் பார்த்து; களிப்பின் மிக்கான் இவை உரைத்தான் - மகிழ்ச்சி மிகக் கொண்ட உரோமபதன் பின்வருமாறு கூறலானான்.
எதிர்கொள்வான்: வான் ஈற்று வினையெச்சம். “எதிர் கொள்ள” என்ற பொருளில் வந்தது. வயம்: வெற்றி. கண்ணுற்று: மிகுந்த ஆதரவுடன் பார்த்து. எழிலி: மேகம். கதிர்: ஒளிக்கற்றை (கிரணம்). பொலம்: பொன் (அழகு என்பதும் பொருளாம்). உழி: போது. எதிர்கொள்வான் வருகின்ற வேந்தனைக் கண்ணுற்று, அரசர்பிரான் தேர்நின்று இழிந்துழி, அடியில் வீழ, எடுத்து முயங்க, சுடர்வேலான் தனை நோக்கி - இவை உரைத்தான் என்பது பொருள் முடிவு. இவை: பின்வரும் புகழுரைக் அடுத்த பாடலில் காணலாம். வேல்: வெல்லுதலையுடையது (ஒரு கைப்படை) ஆதலால் முதன்நிலை திரிந்த தொழிற் பெயராகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Seeing the mighty king who came to receive him, as the lord of kings stepped down
- from his golden chariot that thundered so the clouds were put to shame, the other went and fell at his feet;
- and as his ripened great love grew and swelled, he lifted him and held him tight; at once
- the one filled with joy looked at him of the bright, radiant spear, and spoke these words.
What the poem says
Tacarataṉ climbs down from his chariot, whose rumble shames even the thundercloud; Urōmapataṉ falls at his feet, and Tacarataṉ raises him and embraces him warmly.
The overjoyed Urōmapataṉ then addresses Tacarataṉ; his words of praise follow in the next verse.