கம்பராமாயணம் 2272 · அயோத்தியா 9.95
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
குலம், பொறை, கற்பு இவை சுமந்த கோசலை - உயர்ந்த குடிப் பிறப்பும், பொறுமையும், கற்பும் ஆய இவற்றை நல் அணிகலன்களாகச் சுமந்துகொண்டுள்ள கோசலை; புலம்பு உறு குரிசில்தன் - துயரம் அடைகின்ற பரதனது; புலர்வு - துயர்ச்சோர்வினை; நோக்கினாள் - மனத்தால் ஆராய்ந்தாள்; “நிலம் பொறை - (இந்தக்) கோசல அரசைச் சுமக்கின்ற ஆட்சி உரிமையை; ஆற்றலன் - விரும்பியவன் அல்லன்; நெஞ்சம் தூயது - இவன் மனம் தூய்மையானது; எனா - என்று கருத; சலம் - (இதுகாறும் அவனைப்பற்றித் தான் கொண்டிருந்த) தவறான கருத்து; பிறிது உற - (இப்போது) வேறுபட்டுப் போக; மனம் தளர்ந்து - (இப்படிப்பட்ட நல்லவனை மாறாகக் கருதினோமே என்பதனால்) மனம் சோர்ந்து; கூறுவாள் - சொல்பவள் ஆனாள்.
கைகேயி போலப் பரதனும் அதற்கு உடன்பட்டவன் என்று முன்னர்க் கருதியவள் ஆதலின், அக்கருத்தைச் ‘சலம்’ என்று குறித்தார். ‘சலம்’ தீது, வஞ்சனை, பொய் என்று பொருள்படும். புலர்வு - வாடிக்காய்தல். கோசலைக்குப் பரதன் நிலை கண்டு மனத்தளர்வு ஏற்பட்டது எனலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Watching the wasting grief of the lamenting prince,
- Kōcalai, who bore noble birth, patience and chastity,
- thought, 'He cannot bear the burden of the land; his heart is pure,'
- and as her false suspicion changed, she spoke with a faltering heart.
What the poem says
Kōcalai, whose ornaments are her noble birth, her patience and her fidelity, watches Paratan wither with grief. She realises that he never wanted the burden of the throne and that his heart is pure.
She had suspected that he, like his mother, was part of the plot. That suspicion now gives way, and she is shaken at having thought ill of so good a young man.