கம்பராமாயணம் 2274 · அயோத்தியா 9.97

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தாள் உறு குரிசில் - கோசலையின் திருவடிகளில் வீழ்ந்த பரதன்; அத் தாய் சொல் கேட்டலும் - அந்தத் தாயின் (கைகேயி செய்த வஞ்சனை அறியாயோ என்ற) சொல்லைக் கேட்ட அளவில்; கோள் உறு மடங்கலின் - சிறைபிடிக்கப்பட்ட சிங்கம் போல; குமுறி விம்முவான் - மனக்குமுறல் அடைந்து அழுவான்; நாள் உறு நல் அறம் நடுங்க - காலக் கடவுளொடும் பொருந்தி அவர் அவர்க்குப் பயன் செய்யும் நல்ல அறக்கடவுளும் நடுங்கும்படியாக; நாவினால் - தனது வாயால்; சூளுறு கட்டுரை - சபதமாக ஏற்றுக்கொள்ளப்படும் உறுதி மொழிகளை; சொல்லல் மேயினான் - சொல்லத் தொடங்கினான்.

பரதனின் மனவேதனையைத் தட்டி எழுப்பியது கோசலை கேட்ட வார்த்தை. அதனால், புண்பட்ட மனம் குமுறிப் பொங்கியது; சபதம் சொல்லத் தொடங்கினான். அது கேட்டு அறமே நடுங்குகிறது என்றார். ‘நாவினால்’ என்றது சத்திய வாக்கினன் என்ற அவன் சொல் தூய்மையைச் சிறப்பித்து நின்றது. இதனை வடமொழியில் ‘தாற்பரியம்’ என்ப. “ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய, வழுக்கியும் வாயாற் சொலல்” என்னும் குறளில் (139) ‘வாயால்’ என்பது போல் வந்தது. ‘அன்பிலதனை அறம்’ (குறள் 77) காய்தல் வழக்கு, தண்டம் செயும் ஆற்றல் உடைய அறமும் நல்லோர் செய்யும் சூளுரைக்கு நடுங்குகிறது என்றார். அறக்கடவுளின் தண்டம் காலத்தோடு பட்டு நிகழும் ஆதலின் ‘நாள் உறு நல்லறம்’ எனப்பெற்றது. நாள் என்றது காலத்தைக் குறிக்கும் ஆகுபெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The prince lying at her feet, as soon as he heard that mother's words,
  2. raging and sobbing like a captured lion,
  3. so that good Dharma, which works through time, trembled,
  4. began to utter with his tongue words bound by oath.

What the poem says

Kōcalai's question, whether he really knew nothing of Kaikēyi's plot, cuts Paratan to the quick. Like a caged lion he roars and sobs, and then begins to swear a series of solemn oaths.

Even Dharma, the god of righteousness who punishes wrong in due time, trembles to hear the oaths of so truthful a man. 'With his tongue' stresses the purity of his speech: he is one whose word is always true.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāḷ uṟu kuricil, at tāy col kēṭṭalum,
kōḷ uṟu maṭaṅkalil kumuṟi vimmuvāṉ,
nāḷ uṟu nal aṟam naṭuṅka, nāviṉāl
cūḷuṟu kaṭṭurai collal mēyiṉāṉ.