கம்பராமாயணம் 2278 · அயோத்தியா 9.101

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

“தாய் பசி உழந்து உயிர்தளர - தன் தாய் பசியால் வருந்தி உயிர் சோரவும்; தான் -; தனி பாய் பெரும் பாழ் வயிறு - ஒப்பற்ற பரந்த பெரிய பாழ்வயிற்றை; அளிக்கும் பாவியும் - (சோறிட்டுப்) பாதுகாக்கின்ற பாவி; நாயகன் பட நடந்தவன் - தன் தலைவன் போர்க்களத்திலே இறந்துபட அவனைக் கைவிட்டுத் தன்னுயிரைக் காத்துக் கொண்டு சென்றவன்; (ஆகிய இப்பதினான்கு பேரும்); நண்ணும் அத் தீ எரி நரகத்து - எந்த நரகத்துக்குச் செல்வார்களோ அந்த நெருப்பு எரிகின்ற நரகத்துக்கு; யான் கடிது செல்க - யான் (அவரினும்) விரைந்து முற்படச் செல்வேனாக.

தாய் பசி நீக்க எதையும் செய்யலாம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு உடன் களைய வேண்டுவது தாய் பசி ஆகும். “ஈன்றாள் பசி காண்பான் ஆயினும்” (குறள். 656.) என்றது காண்க. “தாயர்பசி கண்டு நனி தன் பசி தணிக்கும், நாயனைய புல்லர் உறு நரகில் உறுவேன்” (வில்லி. 41.182.) என்றதும் இக் கருத்தினதே.

‘தீ எரி நரகம்’ ஒருவகை நரக விசேடம். நான்கு பாடல்களால் பதினான்கு பேரைச் சுட்டி அவர்கள் செல்கின்ற நரகத்துக்கு யானும் செல்க - ‘கைகேயி எனக்குத் தெரிந்து வரம் கேட்டாளாயின்’ என்று பரதன் கூறினான். பின்வரும் பாடல்களும் இவ்வாறே ஆகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The sinner who, while his mother wastes with hunger and her life fails, himself
  2. feeds his own vast, wide, empty belly,
  3. and he who walked away while his master fell: to the place they reach,
  4. that hell of burning fire, may I go swiftly.'

What the poem says

The sentence begun three verses earlier closes here. The last two sinners are the man who fills his own great empty belly while his mother faints from hunger, and the man who walks away to save himself while his lord dies in battle.

Paratan has now named fourteen kinds of sinner, and he swears that if he knowingly had a part in Kaikēyi's demand, may he go even faster than they to the hell of burning fire. A mother's hunger is something one must relieve at once by any means. The verses that follow repeat the same pattern of oath.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tāy paci uḻantu uyir taḷarat tāṉ taṉi
pāy perum pāḻ vayiṟu aḷikkum pāviyum,
nāyakaṉ paṭa naṭantavaṉum, naṇṇum at
tī eri narakattuk kaṭitu celka yāṉ. '