கம்பராமாயணம் 2282 · அயோத்தியா 9.105

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

“கன்று உயிர் ஓய்ந்து உகப் பால் கறந்து உண்டோன் - (பால் விடாமையால்) கன்றுக்குட்டி உயிர் இல்லையாய்ப் போக (பசுவினிடத்து) எல்லாப் பாலையும் (தானே) கறந்து உண்டவன்; மன்றிடைப் பிறர் பொருள் மறைத்து வவ்வினோன் - மன்றத்தில் பிறரது பொருளை (அவர் அறியாதபடி) மறைத்துக் கைப்பற்றிக் கொண்டவன்; நன்றியை மறந்திடும் நயம்இல் நாவினோன் - (ஒருவன் செய்த) நன்றியை மறந்து (அவனைப் பழித்துரை செய்யும்) இனிமையற்ற நாக்கை உடையவன்; என்று இவர் உறு நரகு என்னது ஆக - என்று கூறப்பெறுகின்ற இந்த மூவரும் சென்றடையும் நரகம் எனக்கும் சொந்தமாகட்டும்.”

தனக்கும் கன்றுக்கும் பயன்படும்படி பசுவினிடத்தில் நிறையப் பாலை இறைவன் அளித்திருப்பவும் கன்றுக்குச் சிறிதும் பால் விடாமல் தானே கறந்து அநுபவித்தல் பாதகம் ஆயிற்று. பலர் கூடியுள்ள இடத்தில் பிறர் பொருளை மறைத்துக் கைப்பற்றல் அறமற்ற செயல். நயமில் நாவினோன் தனக்கு நன்மை செய்தவர்களைத் தூற்றுகின்றவன். ‘ஏ’ காரம் ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'He who milked the cow and drank the milk till the calf's life failed and fell away,
  2. he who in the public assembly hid and seized another's goods,
  3. he of the graceless tongue that forgets a kindness:
  4. may the hell these men reach be mine.'

What the poem says

The oath goes on with three more offenders: the man who milks a cow dry so that her calf starves to death, the man who quietly pockets another's property in a public gathering, and the ingrate whose ungracious tongue forgets a kindness and even reviles his benefactor.

God gave the cow enough milk for both the owner and the calf, so taking all of it is a grave sin. Paratan asks that their hell be his if he is guilty.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kaṉṟu uyir ōyntu ukak kaṟantu pāl uṇṭōṉ,
maṉṟiṭaip piṟar poruḷ maṟaittu vavviṉōṉ,
naṉṟiyai maṟantiṭum nayam il nāviṉōṉ,
eṉṟu ivar uṟu naraku eṉṉatu ākavē. '