கம்பராமாயணம் 2283 · அயோத்தியா 9.106

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

“தன்னுடன் ஆறு வரும் அம் சொல் மாதரை - தன்னுடனே (தன் பாதுகாப்பில்) வழியில் வந்துகொண்டுள்ள அழகிய பேச்சுகளை உடைய பெண்களை; ஊறு கொண்டு அலைப்ப - வழிப்பறிக் கொள்ளையர் புண்படுத்தித் துன்புறுத்த; தன் உயிர் கொண்டு ஓடினோன் - (அவர்களைக் காப்பாற்றாமல் கைவிட்டுத்) தன்னுடைய உயிரைப் பாதுகாத்துக் கொண்டு ஓடிவிட்டவன்; தன் அயலுளோர் பசிக்கச் சோறு துய்த்துளோன் - தன் பக்கத்தில் உள்ளவர்கள் பசியால் வருந்த (அவர்களுக்குச் சோறு கொடாது) சோற்றினைத் தானே உண்டு முடித்தவன்; ஏறும் அக்கதியிடை யானும் ஏற - (இவ் இருவரும்) செல்லுகின்ற அந்த நரகக் கதியிடத்து யானும் செல்வேனாக.”

வழியில் உடன்வரும் மகளிரைப் பாதுகாக்க உயிரைக்கூட இழப்பது பெரும் புண்ணியச் செயல். அவர்களைக் கைவிட்டுத் தன்னுயிரைப் பாதுகாத்துக் கொண்டு ஓடிவிடுகின்றவன் மாபாதகன். கதிகள் தேவகதி, மக்கள் கதி, விலங்கு கதி, நரககதி என்னும் நான்கு. அதனுள் இவர் செல்கிற கதி நரககதி. ‘ஏ’ ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'He who, when sweet-spoken women travelling the road with him
  2. were attacked and harried, ran off to save his own life,
  3. he who ate his rice while those around him went hungry:
  4. to the destiny they ascend to, may I ascend too.'

What the poem says

Paratan names two more: the man who runs to save his own skin when bandits attack the women travelling under his protection, and the man who eats his fill while his neighbours go hungry.

To give one's life defending women in one's care is a great merit, so abandoning them is a heinous sin. Of the four destinies, those of gods, humans, animals and hell-beings, these men are bound for hell, and Paratan swears to share it if he is guilty.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'āṟu taṉṉuṭaṉ varum am col mātarai
ūṟu koṇṭu alaikkat taṉ uyir koṇṭu ōṭiṉōṉ,
cōṟu taṉ ayaluḷōr pacikkat tuyttuḷōṉ
ēṟum ak katiyiṭai yāṉum ēṟavē. '