கம்பராமாயணம் 2290 · அயோத்தியா 9.113
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(யான்) வில்லினும் வாளினும் விரிந்த ஆண்தொழில் - வில்லாலும் வாளாலும் செய்யத் தகும் விரிவான தீரச்செயலை; புல்லிடை உகுத்தனன் - பயனற்ற வழியில் போக்கியவனாய்; பொய்ம்மை யாக்கையை - பொய்த்தன்மை உடைய உடம்பை; சில்பகல் ஓம்புவான் - சிலநாள் பாதுகாக்க (உயிர்வாழ வேண்டி); சீறிய செறுநர் இல்லிடை - தன்னைக் கோபித்துப் பகைத்தவர்கள் வீட்டில்; இடுபதம் - அவர்கள் இடுகின்ற உணவை; என் கையால் ஏற்க - என் கையால் ஏற்று உண்பவனாக (நான் ஆவேனாக.)
இதுவரை தீயவர்கள் செல்லும் கதி என்று சொன்ன பரதன், தன்னையே அக்கேவலமான தீயவர்கள் நிலைக்கு ஆளாக்கிச் சூளுரை இப்பாட்டில் சொல்லியுள்ளான். உயிர்வாழ ஆசைப்பட்டுப் பகைவர் போடும் பிச்சைச் சோற்றைத் தின்று வாழ்தல் மிகக் கேவலமாம். பெருவீரம் உடையவனாய் இருந்தும் அவ்வாறு இருத்தல் அதனினும் மிகக் கேவலம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Having poured away on worthless things the manly prowess spread wide by bow and sword,
- to nurse this false body
- for a few more days, in the houses of the enemies who raged at me
- may I take with my own hand the food they throw.'
What the poem says
So far Paratan has sworn to share the fate of various sinners. Now he swears to become such a wretch himself: a warrior who has squandered his strength with bow and sword, and who, to keep his perishable body alive a few days longer, holds out his hand for the scraps his enemies toss him in their houses.
Living on an enemy's charity out of love of life is shameful; for a man of great valour it is more shameful still.