கம்பராமாயணம் 2291 · அயோத்தியா 9.114
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“யான் -; ஏற்றவற்கு - தன்னிடம் வந்து யாசித்தவனுக்கு; ஒரு பொருள் - ஒரு பொருளை; உள்ளது என்று உதவலன் - இருக்கிறது என்று சொல்லிக் கொடுக்காமலும்; இன்று என்று மாற்றலன் - இல்லை என்று சொல்லி (அவர்களைத் தம்பால் வருதலைப்) போக்காமலும்; வரம்பில் பல்பகல் ஆற்றினன் உழற்றும் ஓர் ஆதன் - கணக்கில்லாத பல நாள்கள் செய்து அவனை அங்கும் இங்குமாக உழல(இரிய)ச் செய்யும் ஒரு கொடிய பாவி; எய்தும் அக்கூற்று உறு நரகின் - அடைகின்ற அந்த யமவாதனை நிரம்பிய நரகத்தில்; ஓர் கூறு கொள்க - ஒரு பங்கினை நானும் பெறுவேனாக.”
“ஒல்லுவது ஒல்லும் என்றலும் யார்க்கும், ஒல்லாது இல்லென மறுத்தலும் இரண்டும் ஆள்வினை மருங்கிற் கேண்மைப் பால; ஒல்லாது ஒல்லும் என்றலும் யார்க்கும், ஒல்லுவது இல்லென மறுத்தலும் வல்லே, இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர் புகழ்குறை படுஉம் வாயில்” (புறநா. 196.) என்பதும் “இசையா ஒரு பொருள் இல் என்றல் யார்க்கும் வசை அன்று, வையத்து இயற்கை; நசை அழுங்க நின்று ஓடிப் பொய்த்தல் பலி குற்றம் உடைத்து” (நாலடி. 111.) என்பதும் இங்கு ஒப்பு நோக்குக. ஆதன் - மூடன், அறிவீனன், பசுப் போன்றவன் என்றும் பொருள்கூறலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'To one who asks, neither saying \u201cThere is nothing\u201d and sending him off,
- nor saying \u201cHere it is\u201d and helping, but for countless days
- making him wander to and fro: the hell full of Death's torments that such a fool reaches,
- may I take a share of it.'
What the poem says
Paratan names the man who, when someone comes to beg, neither gives nor refuses but keeps him waiting and running back and forth for days on end. May Paratan share the torment of that man's hell.
Classical Tamil poems make the same point: to give what one can or to refuse plainly what one cannot is honest, but to promise and then fail, or to keep a supplicant dangling, is a real fault that shames the giver.