கம்பராமாயணம் 2296 · அயோத்தியா 9.119

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1செம்மை நல் மனத்து அண்ணல் செய்கையும் ,
அம்மை தீமையும் , அறிதல் தேற்றினாள் ;
கொம்மை வெம் முலை குமுறு பால் உக ,
விம்மி விம்மி நின்று , அழுது வீங்கினாள் .

பொருள் · Meaning in Tamil

செம்மை - நேர்மையான; நல் மனத்து - நல்ல மனத்தை உடைய; அண்ணல் - பரதனது; செய்கையும் - செயலையும்; அம்மை - அவன் தாயாகிய கைகேயியின்; தீமையும் - தீக்குணத்தையும் (அதனால் விளைந்த தீய செயல்களையும்); அறிதல் தேற்றினாள் - (பரதன் சொல்லிய சூளுரையால்) அறிந்து தெளிந்த கோசலை; கொம்மை வெம்முலை - பருத்த சூடுடைய தனங்களில் இருந்து; குமுறு பால் உக - உள்ளே பொங்கும் பால் சிந்த; விம்மி விம்மி நின்று - அழுது அழுது; இவை விளம்புவாள் - இவற்றைக் கூறலானாள்.

முன்னரே தேர்ந்தாள் ஆயினும் “கைகயர் கோமகள் இழைத்த கைதவம், ஐய நீ அறிந்திலை போலும்” (2197) என்று கோசலை பரதனைக் கேட்ட போது, அவன் தாய் கோசலையும் சந்தேகித்துத்தான் ‘போலும்’ என்றாளாகக் கருதிச் சூளுரை செய்தான். அதனால் ஐயம் நீங்கி நன்கு தெளிந்தாள் ஆயிற்று. தாய்ப் பாசம் மிக்க வழி முலைப்பால் பீறிட்டுச் சிந்துவது தாய்மைக்கு இயல்பு. பல்கால் விம்முதல் - நிகழ்ந்தவைக்காக மட்டுமன்றித், தன் வினாவால் அவன் சூளுரைக்க நேர்ந்தது பற்றியும் ஆம். ‘அண்ணல் செய்கை’ என்பதற்குத் ‘தசரதன் செய்கை’ என்பார் உளர். ‘அண்ணல் செய்கை’ என்பதன்பின், ‘கைகேயி தீமையும்’ என்று வராமல் ‘அம்மை’ என வருதலின் அவ் அம்மைக்கு மகனாகிய பரத அண்ணலே பொருளாகும் என அறிக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The conduct of the noble one with the upright, good heart,
  2. and the wickedness of his mother: she was now certain she knew them both;
  3. as the milk surged and spilled from her full, warm breasts,
  4. sobbing and sobbing, she spoke these words.

What the poem says

Kōcalai now clearly understands both Paratan's integrity and his mother's wickedness. Her maternal love wells up so strongly that milk flows from her breasts, a traditional sign of a mother's overflowing affection.

She sobs again and again, both for what has happened and because her own question drove Paratan to swear such terrible oaths. Some read 'the noble one' as Tacarataṉ, but since 'his mother' follows, the noble one must be her son Paratan.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cemmai nal maṉattu aṇṇal ceykaiyum,
ammai tīmaiyum, aṟital tēṟṟiṉāḷ;
kommai vem mulai kumuṟu pāl uka,
vimmi vimmi niṉṟu, ivai viḷampuvāḷ.