கம்பராமாயணம் 2297 · அயோத்தியா 9.120
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உன்ன உன்ன - நினைக்க நினைக்க; நைந்து - மனம் இற்றுப் போய்; உருகி - கரைந்து; விம்முவாள் - அழுகின்றவளாகிய கோசலை; “மன்னர் மன்னவா! - இராச ராசனே!; முன்னை - உனக்கு முன்பாக அரசாண்ட; நும் குல முதலுளோர்கள் தாம் - நும் குலத்து முன்னோர்களுள்; யாவர் - எவர்; நின்னை நிகர்க்கும் நீர்மையார்! - உன்னை ஒத்த தன்மை உடையவர்கள்;” என்று வாழ்த்தினாள் - பாராட்டி வாழ்த்துரைத்தாள்.
‘யாவரே’ ஏகாரம் வினாப்பொருட்டு. வரத்தால் அரசு தேடிவரவும் வேண்டாம் என்று வெறுத்தொதுக்கும் இராமனது குணம் பரதன் மாட்டும் கண்டனள் ஆதலின், பாராட்டி ‘மன்னர் மன்னவா’ என்றாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Of the first ones of your line who came before,
- who is there with a nature equal to yours,
- O king of kings?' so she blessed him,
- she who, the more she thought, the more she melted and sobbed.
What the poem says
Overcome as she reflects on it all, Kōcalai blesses Paratan. None of the great kings of his ancient line, she says, could match his nature, and she hails him as 'king of kings'.
She gives him that royal title precisely because, like Irāmaṉ, he spurns a kingdom that came to him through a boon.