கம்பராமாயணம் 2297a · அயோத்தியா 9.120a
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இளைய அண்ணலும் - (பரதன்) தம்பியாகிய சத்துருக்கனனும்; உன்ன நைந்து நைந்து உருகும் அன்புகூர் அன்னை தாளில் - நினைக்க மனம் கரைந்து கரைந்து, அன்பு மிகுந்த தாயாகிய கோசலையின் திருவடிகளில்; வீழ்ந்து - விழுந்து; சொன்ன நீர்மையால் - பரதன் சொல்லிய தன்மை போலவே தொழுது அழுது சொல்லி மயங்கினான்; இன்ன வேலைவாய் - இத்தகைய சமயத்தின் கண்; முனிவன் - வசிட்ட முனிவன்; எய்தினான் - அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான்.
‘சொன்ன நீர்மையால்’ என்பதனால் பரதன் புலம்பிய போதே இளையவனும் புலம்பினான் என்க. இருவர்க்கும் இராமனைப் பிரிந்த துக்கமும், தந்தையை இழந்த துக்கமும் ஒன்றே.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At the feet of the loving mother who melted and melted as she thought,
- the younger prince too fell down
- and, in the same manner as was told, worshipped and swooned;
- at that moment the sage arrived.
What the poem says
Paratan's younger brother Cattirukkaṉaṉ, who came home with him, also falls at the feet of Kōcalai, whose heart melts with love the more she thinks, and he weeps and faints just as Paratan did. He shares the same double grief: separation from Irāmaṉ and the loss of their father.
While this is happening, the sage Vacittaṉ, the royal preceptor, arrives.