கம்பராமாயணம் 2298 · அயோத்தியா 9.121
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“மறு இல் மைந்தனே! - களங்கம் இல்லாத மகனே! (பரதனே); வள்ளல் உந்தையார் - வண்மையுடையராகிய உன் தந்தையார்; இறுதி எய்தி - மரணம் அடைந்து; நாள் ஏழ் இரண்டின - பதினான்கு நாள்கள் ஆயின; சிறுவர் செய்கடன் - பெற்றோர்களுக்குப் புதல்வர் செய்யவேண்டிய இறுதிக்கடன்களை; செய்து தீர்த்தி” - செய்து முடிப்பாயாக; என்று உறுவல் மேயினாள் உரையின் மேயினாள் - என்று துன்பத்தில் பொருந்தியவளாய கோசலை தன் சொல்லால் பரதனுக்கு அனுமதி தந்தாள்.
‘நாள் ஏழ் இறந்தன’ என்று பாடம் கூறி, ‘ஏழ் நாள்கள் ஆயின; இன்று எட்டாவது நாள்’ எனல் உண்டு. தூதுவர் செய்தி தாங்கிச் சென்று பரதனிடம் சொல்ல, அவன் மீண்டும் அயோத்தி எய்த இடைப்பயணம் ஏழு, ஏழு நாள்கள் ஆதலின் பதினான்கு எனலே நேரிதாதல் அறிக. கோசலத்துக்கும் கேகயத்துக்கும் ஏழு நாள் வழிப்பயணம் என்பது முன்னர்க் கூறினும். “ஏழு நாளிடை, நளிர்புனல் கேகய நாடு நண்ணினான்” எனவும், “ஏழ் பகல் நீந்தி, கோசலம் நண்ணினான்” எனவும் (1311, 2118) வருவனவற்றைக் காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'O spotless son! Your generous father
- reached his end, and twice seven days have passed;
- perform and complete the rites that sons must do,'
- so she, sunk in grief, gave him leave with her words.
What the poem says
Kōcalai, herself deep in sorrow, tells Paratan that fourteen days have passed since his generous father died, and bids him perform the funeral rites that are a son's duty.
The fourteen days fit the story: the messengers took seven days to reach the Kēkaya country, and Paratan took seven more to return. One textual variant reads 'seven days', but the commentary prefers fourteen.