கம்பராமாயணம் 2299 · அயோத்தியா 9.122

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அன்னை ஏவினாள் அடி இறைஞ்சினான் ,
பொன்னின் வார் சடை புனிதனோடும் போய்த்
தன்னை நல்கியத் தரும நல்கினான்
பன்னு தொல் அறப் படிவம் நோக்கினான் .

பொருள் · Meaning in Tamil

ஏவினாள் - (தந்தைக்கு நீர்க்கடன் செய்யச் செல்க) என்று ஏவிய; அன்னை அடி இறைஞ்சினான் - தாயின் திருவடிகளை வணங்கி; பொன்னின் வார்சடைப் புனிதனோடும் போய் - பொன்னொத்த சிவந்த நீண்ட சடையினை உடைய தூய மாமுனிவனாகிய வசிட்டனோடும் சென்று; தன்னை நல்கி அத் தருமம் நல்கினான் - தன்னை (தன் உயிரை) அர்ப்பணித்து அந்தத் தருமத்தைக் காப்பாற்றிய தயரதனது; பன்னு - (பலராலும்) பல முறை பாராட்டப் பெறுகின்ற; தொல் அறப்படிவம் - பழமையான அறத்தின் திருவுருவத்தை; நோக்கினான் - பார்த்தான்.

செம்பொன்போலச் சிவந்திருத்தலின் ‘பொன்சடை’ என்றார். ‘தன் உயிர் தந்து தருமம் காத்தவன்’ தயரதன் என்பதனைப் பின்வரும் “வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல்” என வரும் (4018) வாலி கூற்றானும் தெளிக. தைலக் கடாரத்துள் இடப்பட்டிருந்த மேனியை எடுத்துக் கட்டிலிற் கிடத்தப் பரதன் கண்டனன் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He bowed at the feet of the mother who commanded him,
  2. went with the holy one of long golden matted hair,
  3. and looked upon the form of ancient, much-praised dharma,
  4. the king who gave himself and so gave that dharma.

What the poem says

Paratan bows to Kōcalai and goes with Vacittaṉ, whose long matted hair is red-gold, to see his father's body. The king is called the very image of ancient dharma, one who gave up his life to keep his word.

Later in the epic Vālī too praises Tacarataṉ as the generous king who kept truth and tradition and gave up his life. The body had been preserved in a vat of oil; it is now taken out and laid on a couch for Paratan to see.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉai ēviṉāḷ aṭi iṟaiñciṉāṉ,
poṉṉiṉ vār caṭaip puṉitaṉōṭum pōy
taṉṉai nalki at tarumam nalkiṉāṉ
paṉṉu tol aṟap paṭivam nōkkiṉāṉ.