கம்பராமாயணம் 2300 · அயோத்தியா 9.123
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(பரதன்) மண்ணின் மேல் விழுந்து அலறி மாழ்குவான் - பூமியின் மேலே விழுந்து புலம்பி மயங்குபவனாகி; அண்ணல் - பெருமை பொருந்திய; ஆழியான் - ஆணைச்சக்கரத்தை உடைய; அவனி காவலன் - உலக வேந்தனாய தயரதனது; எண்ணெய் உண்ட - தைலத்திற் கிடந்த; பொன் எழில் கொள் மேனியை - பொன் மயமான அழகு கொண்ட திருமேனியை; கண்ண நீரினால் - (தன்) கண்களிலிருந்து பெருக்கெடுத்து வரும் கண்ணீரினால்; கழுவி - தூய்மை செய்து; ஆட்டினான் - மூழ்கச் செய்தான்.
எண்ணெயில் மூழ்கிக் கிடந்த மேனி இப்போது பரதன் கண்ணீரில் மூழ்கியது என நயம் காண்க. எண்ணெயாட்டியதால் மேனி பொன்னிறம் பெற்றது என்பது வான்மீகத்திற் கண்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Falling on the ground, crying out and swooning,
- the golden, beautiful body, steeped in oil,
- of the noble king of the wheel, the guardian of the earth,
- he washed and bathed with the water of his eyes.
What the poem says
Paratan falls to the ground, crying out and fainting, and then bathes his father's body in his tears.
The poet plays on the image: the body that had lain steeped in oil, which gave it a golden sheen, is now steeped again, this time in the tears of a son. The golden colour from the oil is also mentioned in Vālmīki.