கம்பராமாயணம் 2301 · அயோத்தியா 9.124
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நான் மறைத்துறை செய் கேள்வியார் - நான்கு வேதங்களின் துறைகளிலும் பரந்து சென்ற கேள்வியறிவினை உடையவராய அந்தணர்; பரிவின் - (மனத்தின்கண் நிகழும்) அன்பிரக்கத்தோடு; மன்னனை - தயரத மன்னனது உடலை; அவ்வயின் - அஃதுள்ள இடத்தினின்றும்; சுற்றும் பற்றி வாங்கினார் - நாற்பக்கமும் இருந்து தம் கையாற் பற்றி எடுத்து; கொற்ற மண்கணை குமுற - வெற்றி தரும் வீரமுரசம் பேரொலி செய்ய; மற்று ஓர் பொன்னின் மா மானம் ஏற்றினார் - வேறொரு பொன்னாலியன்ற பெரிய விமானத்தில் ஏற்றினர்.
வேதம் எழுதாக் கிளவியாதலின் கற்றார் என்னாது கேள்வியார் என்றார். உடலை எடுத்தல், ஏற்றுதல் ஆகிய அனைத்திற்கும் மந்திரமும், தந்திரமும் உண்டாதலின் விமானம் ஏற்றுதலை அந்தணர் மேற்றாக்கினார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Taking hold of him there, they lifted him tenderly,
- those learned by hearing in all the branches of the four Vedas around him,
- and as the drums of victory thundered, the king
- they placed upon another great golden bier.
What the poem says
The Brahmins versed in the four Vedas gather round, lift the king's body tenderly from where it lies, and to the roar of the royal war-drums place it on a great golden bier shaped like a celestial car.
They are described as learned 'by hearing' because the Veda was an unwritten text passed on orally. Each step of handling the body has its proper mantras and rites, so it is the Brahmins who lift him.