கம்பராமாயணம் 2303 · அயோத்தியா 9.126
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சங்கு - சங்குகளும்; பேரியும் - சாப்பறையும்; தழுவு சின்னமும் - இறப்பின்கண் ஊதப்படுகின்ற கொம்புகளும்; எங்கும் எங்கும் நின்று இரங்கி ஏங்குவ - எல்லாப் பக்கங்களிலும் இருந்து கேட்பவர்க்குத் துன்பமுண்டாம்படி அழுதாற்போல ஒலிக்கின்றவை; மங்குல் தோய் நகர் - மேகங்கள் வந்து படியப் பெறுகின்ற நகரம்; மகளிராம் என - (தானே) பெண்களைப் போலிருந்து; பொங்கு கண் புடைத்து - துன்ப மிகுதியுடைய கண்களை அடித்துக்கொண்டு; அழுவ போன்ற - அழுகின்றவை போன்றன.
பறை முதலியன ஒலித்தல் ‘நகரமே கண்புடைத்து அழுதல் போலும், கண் புடைத்து அழுதல் மகளிர்போல’ என்று கூறினார். பேரி - பெருமுரசு. இங்குச் சாப்பறை ஆம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Conches, great drums and the accompanying horns
- wailed and moaned, sounding everywhere,
- as if the cloud-touching city itself had become its women
- beating their swollen eyes and weeping.
What the poem says
Conches, funeral drums and horns sound from every side, and their mournful noise is like weeping.
The poet imagines the city itself, whose towers touch the clouds, as a crowd of grieving women beating their eyes and crying. The word for 'eye' also means the face of a drum, so the drummers striking their drums become mourners striking their eyes.