கம்பராமாயணம் 2307 · அயோத்தியா 9.130

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'துறந்து போயினான் ' எனவே , 'தோன்றல் நீ
பிறந்து பேர் அறம் பிழைத்தது ' என்றல் போல் ,
இறந்து போயினான் ; இருந்தது ஆண்டு அது
மறந்து வேறு ஒரு மைந்தன் ஆம் கொல் ஆம் !

பொருள் · Meaning in Tamil

(வசிட்டன்) “தோன்றல்! - பரதனே!; நீ பிறந்து பேர் அறம் பிழைத்தது - நீ பிறந்ததனால் பெரிதாகிய (அரசகுலத்து) அறம் தவறிவிட்டது (மூத்தவன் இருக்க இளையவனாகிய நீ வரத்தால் அரசு பெற்றமையால்); நுந்தை துறந்து போயினான் - (அதனால்) உன் தந்தையாகிய தயரதன் உன்னை (மகனல்லன் என்று) துறந்து இறந்தான்;” என்ற போது - என்று சொல்லிய போது; இறந்து போயினான் - (பரதன்) இறந்து போனான்; ஆண்டு இருந்தது அது - அவ்விடத்தில் (பரதன் இருப்பதாகிய அத்தோற்றம் காண்பது); மறந்து - தன் தன்மை கெட்டு; வேறொரு மைந்தன் ஆம் கொலாம் - வேறு ஒரு மகனாக இருக்கும் போலும்.

வசிட்டன் சொற்கேட்ட அளவில் பரதன் இறந்து போனான்; இருக்கின்றவன் பரதன் அன்றோ எனின்? அன்று; இவன் வேறு ஒரு மகன்; அவனும் தன் தன்மை திரிந்து பரதனைப்போல உருவம் கொண்டுள்ளான் போலும் என்றவாறாயிற்று. பரதனது துயர் மிகுதி பற்றி இங்ஙனம் கூறினார். ‘கொல்’ ஐயப்பொருளில் வந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Your father renounced you and departed; O prince, through your
  2. birth the great dharma went astray': when this was said,
  3. he died; the one who remained there,
  4. forgetting himself, must have been some other son!

What the poem says

When the sage tells Paratan that through his birth the great law of the dynasty was broken and that his father disowned him before dying, the poet says that Paratan died on the spot.

The one still standing there, then, must have been some other son who had lost his own nature and merely taken on Paratan's shape. This hyperbole conveys how utterly the words crushed him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tuṟantu pōyiṉāṉ nuntai, tōṉṟal nī
piṟantu pēr aṟam piḻaittatu ' eṉṟapōtu,
iṟantu pōyiṉāṉ; iruntatu āṇṭu atu
maṟantu vēṟu oru maintaṉ ām kolām!