கம்பராமாயணம் 2309 · அயோத்தியா 9.132
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“இரவி தன் குலத்து - சூரிய வம்சத்தில்; எந்தை முந்தையோர் - என் தந்தை, மற்றும் முன்னோர்களது; பிரத பூசனைக்கு - பிரேத வழிபாடு செய்வதற்கு; உரிய -; பேறு இலேன் - பாக்கியம் பெறாதவனாக உள்ளேன்; (ஆனால்) அரசு செய்யவோ - (அந்தத் தந்தை முன்னோர்களது) அரசினைப் பெற்று நடத்தவோ; ஆவது ஆயினேன் - பொருந்துவதானேன்; உரைசெய் மன்னர் - புகழ்பெற்ற அரசர்கள்; என்னில் - என்னைக்காட்டிலும்; மற்று யாவர் - வேறுயார் உளர்?”
தனக்குத் தானே நொந்து கூறிக்கொண்டு, தன்னை இகழ்ந்து புலம்புகிறான். ‘இரவி தன் குலத்து எந்தை, முந்தையோர்களில், உரைசெய் மன்னர் என்னில் மற்று யாவர்’ எனவும் கூட்டிப் பொருள் உரைக்கலாம். பிரேத பூசனை செய்யுங்கால், தந்தையொடு முன்னோர்களையும் இணைத்தே செய்யவேண்டுதலின் ‘எந்தை முந்தையோர் பிரேத பூசனை’ என்று கூட்டுவதில் தவறில்லை. ‘முன்னோர்க்குக் கடன்செய்யும் தகுதியற்ற யான் அவர்களது உரிமையைப் பெறுவது எவ்வாறு பொருந்தும்’ என்பது பரதன் அவலவுரையாம். ‘ஏ’ காரம் வினாப் பொருளில் வந்துள்ளது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Who among praised kings is there other than me?
- In the line of the Sun, for the funeral worship of my father
- and those before him, I have not the right;
- and have I become fit to rule the kingdom?'
What the poem says
Paratan mocks himself bitterly. In the Solar line he alone is not allowed to perform the funeral offerings for his father and ancestors, and yet he is supposed to be fit to inherit their throne.
'What famous king could compare with me?' he asks with savage irony. One who is unworthy even to make the offerings to his forefathers can hardly be worthy of their kingdom.