கம்பராமாயணம் 2311 · அயோத்தியா 9.134

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

துன்னு தாள் வளம் சுமந்த தாழையில் - நெருங்கிய வளப்பமான அடிமரத்தை உடைய தென்னையின்; பன்னு வான்குலை - பலராலும் பாராட்டப் பெறுகின்ற சிறந்த குலையில்; பதடி ஆயினேன் - உள்ளொன்றும் இல்லாத வெறுங்காயாக ஆனேன்; என்னையே ஈன்று காத்த என் அன்னையார் - என்னைச் சுமந்து பெற்று வளர்த்த என் தாயார்; எனக்கு அழகு செய்தவா - எனக்கு நன்மை செய்தவாறு; என்னையே - என்ன அழகாயிருக்கிறது கண்டீர்களோ?

தாழை என்பதற்குத் தென்னை என்பது நேர்பொருள். ‘பதடி’ என்பது மக்களுக்குப் பயன்படும் பொருள் அற்ற நெல், தேங்காய் முதலியவற்றைக் குறிக்கும். உள்ளீடு இல்லாத தேங்காயைனமைசக்காய் என்பர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'On a coconut palm whose sturdy trunk bears rich fruit,
  2. in a fine, much-praised cluster I have become an empty husk;
  3. see how well my mother, who bore me and reared me,
  4. has adorned me!'

What the poem says

Paratan compares his dynasty to a flourishing coconut palm with a splendid cluster of nuts, and himself to the one empty nut with nothing inside.

With bitter irony he says: see what a fine gift my mother, who bore and raised me, has given me. 'Patāṭi' means grain or fruit with no kernel, useless to anyone.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tuṉṉu tāḷ vaḷam cumanta tāḻaiyil
paṉṉu vāṉ kulaip pataṭi āyiṉēṉ
eṉṉai, eṉṉaiyē īṉṟu kātta eṉ
aṉṉaiyār eṉakku aḻaku ceytavā! '