கம்பராமாயணம் 2312 · அயோத்தியா 9.135

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்று கூறி நின்று இடரில் மூழ்கும் அத்
துன்று தாரவற்கு இளைய தோன்றலால்
அன்று நேர் கடன் அமைவது ஆக்கினான் ,
நின்று நான்மறை நெறிசெய் நீர்மையான் .

பொருள் · Meaning in Tamil

நான்மறை நெறி நின்று - நால் வேத வழியில் தான் நிலை பெற்று நின்று; செய் நீர்மையான் - (அவ்வேதவழியிலே) எல்லாவற்றையும் (குறையறச்) செய்கின்ற தன்மை உடையவனாகிய வசிட்டன்; என்று கூறி -; நொந்து இடரின் மூழ்குறும் - மனம் வருந்தித் துயரில் மூழ்கியுள்ள; அத்துன்று தாரவற்கு - அந்த நெருங்கிய மாலை அணிந்துள்ள பரதனுக்கு; இளைய தோன்றலால் - பின்பிறந்த தம்பியாகிய சத்துருக்கனனால்; அன்று - அப்பொழுது; நேர் - தயரதனுக்குச் செய்ய வேண்டிய; கடன் - இறுதிச் சடங்குகளை; அமைவது ஆக்கினான் - பொருந்துவதாகச் செய்து முடித்தான்.

‘தாரவன்’ - என்பது அரசகுலத்தான் என்பதால் சொல்லப்பெற்றது. இங்குத் தார் அணிந்திருந்தான் எனல் வேண்டுவதின்று; துக்கச் செயல்கள் நிகழ்கிறதாகலின்; அணிந்திருந்த தாரைக் கழற்றி எறிவதும், எறியாமையும் ஆகிய எவற்றையும் சிந்திக்காத மனநிலை பரதனது அப்போதைய நிலை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As he said this and sank, grieving, into sorrow,
  2. through the younger brother of that prince of the dense garland
  3. he had the due rites properly performed that day,
  4. he who abides by the four Vedas and acts according to them.

What the poem says

While Paratan, still lamenting, sinks into grief, Vacittaṉ, who lives and acts strictly by the Vedas, has the funeral rites performed that day by Paratan's younger brother Cattirukkaṉaṉ instead.

Paratan is called 'the one with the garland' simply as a royal title; in his grief he is in no state to think about whether he is wearing a garland or has thrown it off.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu kūṟi nontu iṭariṉ mūḻkum at
tuṉṟu tāravaṟku iḷaiya tōṉṟalāl
aṉṟu nēr kaṭaṉ amaivatu ākkiṉāṉ,
niṉṟu nāṉmaṟai neṟi cey nīrmaiyāṉ.