கம்பராமாயணம் 2313 · அயோத்தியா 9.136

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இழையும் ஆரமும் இடையும் மின்னிடக்
குழையும் மா மலர்க் கொம்பு அனார்கள் தாம் ,
தழை இல் முண்டகம் தழுவு கான் இடை
நுழையும் மஞ்ஞை போல் , எரியில் மூழ்கினார் .

பொருள் · Meaning in Tamil

குழையும் - ஒல்கித் தளரும்; மா மலர்க் கொம்பு அனார்கள்தாம் - சிறந்த மலர் பூத்த கொம்பினை ஒத்தவர்களாகிய தேவியர்கள்; இழையும் ஆரமும் இடையும் மின்னிட - பொன் வடமும், முத்துவடமும், இடுப்பும் மாறிமாறி மின்னொளி செய்ய; தழை இல் முண்டகம் தழுவு கானிடை - தழையற்ற (செந்தாமரை) மலர்களே நிரம்பியுள்ள காட்டினிடத்து; முழையில் மஞ்ஞை போல் - மலையிடத்து வாழும் மயில் கூட்டம் மூழ்குவதுபோல; எரியில் மூழ்கினார் - நெருப்பில் மூழ்கி விண்ணுலகு சென்றனர்.

செந்தாமரைக் காட்டினுள் மயில்கள் புகுவதுபோல் நெருப்பிடையே தேவிமார் மூழ்கினர் என்பதாம். தாமரை மலர் நீரிடை ஆகவும் ‘கானிடை’ என்றது இடம் நோக்கியன்று; தாமரைப் பூவின் நெருக்கமும் மிகுதியும் நோக்கிக் கூறப்பெற்றது. இங்ஙனம் கூறுவது “தாமரைக் காடு அனைய மேனித் தனிச் சுடரே” (திருவா. திருச். 20) என்ற இடத்திலும் காண்க. புதல்வர்ப் பெறாத அறுபதினாயிரம் தேவிமார் இவ்வாறு நெருப்பில் மூழ்கி நற்கதி பெற்றனர் என்க. ‘முழையில் மஞ்ஞை’ வாழும் இடம் சுட்டியது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With their ornaments, necklaces and waists flashing like lightning,
  2. those who were like swaying branches of great blossoms
  3. plunged into the fire, like peacocks from mountain caves
  4. entering a forest of lotuses without leaves.

What the poem says

The king's queens, graceful as flowering branches that sway, their jewels, pearl necklaces and slender waists flashing, enter the funeral fire.

The poet compares them to peacocks from the mountain caves plunging into a thicket of red lotuses, the leafless flames being the lotuses. The commentary explains that these were the sixty thousand childless queens, who thus attained a blessed state.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iḻaiyum āramum iṭaiyum miṉṉiṭa
kuḻaiyum mā malark kompu aṉārkaḷtām,
taḻai il muṇṭakam taḻuvu kāṉiṭai
muḻaiyil maññaipōl, eriyil mūḻkiṉār.