கம்பராமாயணம் 2314 · அயோத்தியா 9.137
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அம்புயத் திங்கள் வாள்முகம் திரு விளங்குற - தாமரையும், சந்திரனும் போலும் ஒளிபடைத்த திருமுகம் மேலும் திருமகளின் மலர்ச்சி பொருந்தியதாக; அங்கி நீரினும் குளிர - (தம் கணவன் மேனியைத் தழுவியதாகிய பாவனையால் தாம் தழுவிய) நெருப்பு நீரைக்காட்டிலும் குளிர்ந்து தோன்ற; சங்கை தீர்ந்து - மனத்துயர் நீங்கி; தம் கணவர் பின் செலும் நங்கைமார் புகும் உலகம் - தம் கணவருடன் இறந்து பின் செல்லும் கற்புடை மகளிர் எய்தும் நல்லுலகத்தை; நண்ணினார் - இவர்களும் அடைந்தார்கள்.
அங்கி குளிர்தல் கற்புடை இவர்களுக்கே; அன்றி நெருப்பின் சுடுதல் தன்மை மாறியதன்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the fire felt cooler to them than water, and their bright faces,
- like the lotus and the moon, shone with splendour,
- their anxieties ended, they reached the world entered
- by noble women who follow their husbands.
What the poem says
To these faithful wives the fire feels cooler than water, because to them it is like embracing their husband. Their lotus- and moon-like faces glow, their distress falls away, and they reach the heaven reserved for women who follow their husbands in death.
The commentary notes that the fire was cool only for these chaste women; it had not lost its power to burn.